வாழ்க பாரதம்னு சொல்லுங்க.. எதற்கு "ஜெய்ஹிந்த்" சொல்லனும்.. கொங்கு ஈஸ்வரன் கொடுத்த விளக்கம்!
சென்னை: ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாத ஆளுநர் உரைக்கு, தான் வரவேற்பு தெரிவித்தது ஏன் என்பது பற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான கொங்கு ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய கொங்கு ஈஸ்வரன் பேசிய ஒரு பேச்சு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆளுநர் உரையாற்றியதன் இறுதிப் பகுதியில் ஜெய் ஹிந்த் என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததாகவும், தற்போது ஆளுநர் உரையில் அது போன்ற வாசகங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழகம் தலை நிமிர்ந்தது
தமிழகம் தலைநிமிர்ந்து விட்டதற்கான அடையாளம் இது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில்தான், பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் கூட கொங்கு ஈஸ்வரன் இவ்வாறு பேசியிருக்க கூடாது என்று கண்டனங்களை தெரிவித்தனர். ஜெய்ஹிந்த் என்பதற்கு இந்தியா வாழ்க என்று பொருள். எனவே இதை கொங்கு ஈஸ்வரன் எப்படி எதிர்க்கலாம் என்று பலரும் கேள்விகளை எழுப்பினர் .

தேசியத்திற்கு எதிரானது இல்லை
இதுதொடர்பாக கொங்கு ஈஸ்வரன் ஊடகங்களிடம் பேசுகையில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், வாழ்க பாரதம் என்று சொல்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது. எனது கட்சியின் பெயரிலேயே, தேசிய என்று இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது தேசியத்துக்கு எதிராக எப்படி நான் பேசுவேன்.

இரு மொழிக் கொள்கை
தமிழகம் இருமொழிக் கொள்கையை பின்பற்றி வரும் மாநிலம். கடந்த ஆட்சி காலத்தில் ஜெய்ஹிந்த் என்ற இந்தி வார்த்தை ஆளுநர் உரையில் பயன்படுத்தப்பட்டது. இப்போது அந்த இந்தி வார்த்தை பயன்படுத்தப்படாமல் நீக்கப்பட்டுவிட்டது. இருமொழிக் கொள்கை உறுதியாக காப்பாற்றப்பட்டு விட்டது என்ற அர்த்தத்தில் நான் பேசி இருந்தேன்.

வாழ்க பாரதம்
எனது பேச்சை அரசியல் லாபத்திற்காக சிலர் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. "வாழ்க பாரதம்" என்று சொல்வது தவறு கிடையாது. ஏனென்றால் அது தமிழ். ஜெய்ஹிந்த் என்பது ஹிந்தி மொழி என்பதால் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இது மொழி சார்ந்த பிரச்சனைதானே தவிர தேசிய உணர்வு சார்ந்த பிரச்சினைகள் எழவில்லை. இவ்வாறு கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications