ஆளுநர் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க காலம் நெருங்கிவிட்டது! அனல் கக்கிய கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: ஆளுநர் ரவி வெறும் அம்பு தான் என்றும் அவரை எய்தவர்கள் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.
சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து பேசிய போது அவர் இவ்வாறு ஆளுநர் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

எய்தப்பட்ட வேகத்தை விட அம்பு கொஞ்சம் ஓவராக ஆடுகிறது என்று கூறிய ஈஸ்வரன் ஆளுநர் ரவியை சூசகமாக தாக்கிப் பேசினார். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தோ, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியோ ஒரு நாளாவது முதலமைச்சர் ஸ்டாலினையோ, அமைச்சர்களையோ அழைத்து ஆளுநர் ரவி பேசியிருப்பாரா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிற்கு தனது பதவிக்காலத்தில் இந்த நல்லதை நான் செய்திருக்கிறேன் என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா என வினவிய ஈஸ்வரன் ஆளுநர்கள் இடையூறு செய்வது இன்று நேற்றல்ல 60 ஆண்டுகால பிரச்சனையாக உள்ளது என்றார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை, தமிழக அரசு இயற்றிய சட்டங்களை முடக்குவதற்கு என்ன காரணம் என்பதை கூட ஆளுநர் ரவியால் சொல்ல முடியவில்லை என ஈஸ்வரன் சாடினார்.
ஆளுநர் பதவி என்பது இனி தொடரவே கூடாது என்று ஆவேசமாக பேசிய ஈஸ்வரன், முதலமைச்சர் ஸ்டாலின் காலத்திலாவது இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்றார். ஆளுநர்களின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்தவர், நமக்கு வேலை வைக்காமல் உச்சநீதிமன்றமே ஆளுநர்களுக்கு கடிவாளம் போட்டுவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் ஈஸ்வரன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications