ஏதோ சொல்ல வர்றாரு திருமாவளவன்.. திமுக கூட்டணியில் என்ன பிரச்சனைன்னு தெரியலயே.. பாஜக வானதி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்கு வங்கிக்காக ஒரு மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது, இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது. இதுதான் சமூகநீதியா? என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன் விசிக தலைவர் திருமாவளவன் நடத்தப்போகும் மதுஒழிப்பு மாநாடு குறித்தும் கருத்து கூறியிருக்கிறார்.

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது... இதற்கான ஏற்பாடுகளும் கள்ளக்குறிச்சியில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

kovai coimbatore thirumavalavan vck dmk government

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "மதுவிலக்கு கொண்டு வரும் விஷயத்தில் தமிழகத்தில் தயக்கம் உள்ளது. அதிமுகவும், திமுகவும் இதில் தயக்கம் காட்டுகிறன்றன.. தயக்கம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் மாநாட்டுக்கு வரலாம்... அதிமுக கூட வந்து பங்கேற்கலாம். அதிமுக மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

நிலைப்பாடு: இந்த கூட்டம் தேர்தலுக்கானது கிடையாது.. தேர்தல், கூட்டணி விஷயத்தில், எங்களுடைய நிலைப்பாடு வேறானது... எனவே, இந்த கூட்டத்தை தேர்தலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்'' என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

திமுக கூட்டணியில் இருந்து, மது ஒழிப்பதற்கான மாநாட்டை திருமா கூட்டியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை தந்து வருகிறது.. இந்த கூட்டத்துக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது அதற்கு மேல் அதிர்வலைகளை கிளப்பி விட்டுள்ளது.. விசிக எங்களுக்கு எதிரியில்லை என்று மூத்த தலைவர் அதிமுகவின் ஜெயக்குமார் சொல்லியிருப்பதும் பலரையும் கவனிக்க செய்துள்ளது.

விசிக: அதிமுகவுக்கான அழைப்பானது, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற போகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதனை திமுக தரப்பில் மறுத்தாலும், சொந்த கூட்டணியை அரசை கண்டித்து திருமாவளவன் மாநாட்டை அறிவித்திருப்பது தொடர்ந்து சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.. அதில், "தமிழகத்தில் மதுவை ஒழிக்க வலியுறுத்தி பாஜக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மாநாடுகளை நடத்தி உள்ளது. கோவையில் கூட டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

திருமாவளவன்: திருமாவளனுக்கு திமுக கூட்டணியில் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவம் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமாவளவன் தன்னுடைய கட்சி சார்பில் நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம், தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது திமுகவுக்கு இந்த மாநாட்டின் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று தான் நினைக்கிறேன்.

ஸ்டாலின்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில்லை. விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. வாக்கு வங்கிக்காக ஒரு மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது, இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது. இதுதான் சமூகநீதியா? ஒரு மாநில முதல்வர், அம்மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+