எல்லாம் போச்சு.. பிரச்சாரம் முடிந்த உடனே.. அவசரமாக எடப்பாடியிடம் முறையிட்ட குஷ்பு.. அப்போ பிடிஆர்?
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டிருக்கிறார் நடிகை குஷ்பு. குஷ்புவின் முறையீட்டைத் தொடர்ந்து மாஜி அமைச்சர் உதயக்குமாரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி என்ன நடந்தது? தேர்தல் நேரத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை வந்தது?
அதிமுக-பாஜக கூட்டணியின் மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய நீதிக்கட்சி சார்பில் நடிகை குஷ்புவின் கணவரும் சினிமா இயக்குநருமான சுந்தர் சி களமிறக்கப்பட்டார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் சுந்தர் சி. கணவரின் வெற்றிக்காக, நடிகை குஷ்பு தீவிரமாக வாக்குகள் சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.

மதுரை மத்திய தொகுதியில் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் நடிகர்/இயக்குநர் சுந்தர் சி ஆகியோரிடையே கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. தொகுதியின் வளர்ச்சி மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து சுந்தர் சி முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த பி.டி.ஆர், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமைகள் கூடத் தெரியாமல் சுந்தர் சி பேசுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.
குஷ்பு புகார்
இந்த சண்டை ஒரு பக்கம் இருக்க.. எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்டிருக்கிறார் நடிகை குஷ்பு. குஷ்புவின் முறையீட்டைத் தொடர்ந்து மாஜி அமைச்சர் உதயக்குமாரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த புகாருக்கு பின் வேறு காரணம் இருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அதே சமயம், நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் குஷ்பு. அப்போது, தேர்தல் களத்தில் அதிமுகவினர் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில் சுணக்கம் காட்டினார்கள். அதிமுகவுக்கு இந்த தொகுதி கிடைக்காததால் எங்களை வெற்றிபெற வைக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பணத்தை எங்களிடமிருந்து வாங்குவதற்கு மட்டுமே அக்கறை காட்டினார்கள்.
இரண்டு மூன்று கோஷ்டிகளாக இந்த தொகுதியில் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்திக்கு காலையில், இந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டுமென ஒரு குரூப் எங்களுக்கு சொல்லும். அந்த இடத்துக்கு நாங்கள் சரியான நேரத்துக்கு வந்தால், மற்றொரு க்ரூப் அந்த இடத்துக்கு வராமல் டிலே செய்வார்கள்.
அவர்களிடம் பேசினால், அந்த க்ரூப் தானே உங்களுக்கு நேரம் கொடுத்தது. அதனால் அவர்களிடமே செல்லுங்கள். நாங்கள் வரமாட்டோம் என வம்பு பண்ணுவார்கள். இப்படி ஒவ்வொரு கோஷ்டியிடமும் சிக்கிக்கொண்டு சிரமத்தை அனுபவத்தோம். இது தேர்தலில் வாக்குப்பதிவின் போதும் எதிரொலிக்குமோ என பயமாக இருக்கு. அதிமுக தரப்பினரை திமுக வளைத்துவிட்டதோ என சந்தேகம் இருக்கு என்று புலம்பித்தள்ளியிருக்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, உடனே இதை கவனிக்கிறேன் என்று குஷ்புக்கு உறுதி தந்த எடப்பாடி பழனிசாமி, உடனே மாஜி மந்திரிகள் ஆர்.பி.உதயக்குமாரை தொடர்புகொண்டு, குஷ்பு சொன்ன விபரங்களை விவரித்து விட்டு, மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர் வேண்டுமானால் சுந்தர் சி யாக இருக்கலாம். ஆனால், அங்கு போட்டியிடுவது ரெட்டை இலை. நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமிருக்கு. ஆனா, அங்குள்ள நம் கட்சியினர் கோஷ்டி போட்டுக்கொண்டு மல்லுக்கட்டுகிறார்கள். அதை என்னனென்னு விசாரித்து ஆக்சன் எடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
- சிறப்பு நிருபர் எழில்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications