இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி இப்படி பேச தைரியம் உள்ளதா.. திருப்பதி லட்டு மீம்ஸ்களால் குஷ்பு ஆவேசம்
செனனை: பாஜகவினர் பலரும் திருப்தி லட்டு மீம்ஸ் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், நான் அவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு (கிண்டல்) உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாகயானது.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருப்பதி திருமலையின் புனிதத்தையே முற்றிலுமாக கெடுத்து விட்டார்கள். புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளார்கள். எனினும், நாங்கள் இப்போது திருப்பதியில் மிக தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த விவாகரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. மறுபுறம் இதனிடையே மத்திய உணவு பாதுகாப்பு துறை நடத்திய ஆய்வுகள் வெளியானது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டிந்தது. இதற்குநாடு முழுவதும் பெருமாள் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்பவர்களிடம் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். பாஜகவினரும் தமிழ்நாட்டில் லட்டு விவகாரம் குறிப்பிட்ட சிலர் கிண்டல் செய்யப்படுவதை கண்டு கொதித்து போய் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்த சூழலில் அண்மையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில், லட்டு பாவங்கள் என்ற பெயரில் கேலி செய்து வீடியோ வெளியானது.
இந்த வீடியோவிற்கு எதிராக பாஜகவினர் கடும்எதிர்வினையாற்றினார்கள். இதையடுத்து உடனடியாக அன்று இரவே லட்டு பாவங்கள் வீடியோவை பரிதாபங்கள் குழு நீக்கியது. மேலும் வருத்தமும் தெரிவித்தது. வருத்தம் தெரிவித்து வீடியோவை நீக்கிய போதிலும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி விமர்சனத்தை ஏற்படுத்தியதால், பாஜகவினர், ஆந்திர காவல்துறையில் பரிதாபங்கள் யூடியூப் குழு மீது புகார் அளித்துள்ளது.
அதேநேரம் பாஜகவினர் பலரும் லட்டு மீம்ஸ் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. இதில் நான் கவனித்ததெல்லாம், இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், அமைதியாக கடந்து செல்லும் மனோபாவத்தைக் கொண்டிருக்குமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். என்ன நியாயம்?
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு (கிண்டல்) உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாகப் பயன்படுத்துவதை நினைத்தால் உங்கள் முதுகெலும்பு எல்லாம் நடுங்குகிறது.
மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் மதிப்பது தான். நீங்கள் இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருக்க முடியாது. நான் இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம், ஆனால் நான் கடவுள் மீது பயபக்தியுள்ள இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்துவும் கூட.. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். இந்து மதத்தை அவமதிப்பதையோ, கிண்டல் செய்வதையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்து மதத்திற்கு எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துகிறது. இதற்கு காரணமானவர்கள்ள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். வெங்கடேசப் பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்" இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications