தைரியம் தான் குஷ்புக்கு.. முதல்முறையாக பாஜகவின் கமலாலயத்தில் இருந்து அப்படி ஒரு வார்த்தை!
சென்னை: நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான் என்று நடிகை குஷ்பு பாஜகவின் கமலாலயத்தில் இருந்து பேசியுள்ளார். இதன் மூலம் பாஜக அலுவலகத்திற்குள், நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று சொன்ன முதல் நபர் குஷ்பு மட்டுமே,
Recommended Video
பாஜகவிற்கும், பெரியாரிஸ்ட்டுகளுக்கும் ஏழாம் பொருத்தமாகவே ஆரம்ப காலம் முதல் உள்ளது. கடவுள் மறுப்பு கொள்கைக்கும், கடவுள் உள்ளார் என்ற கொள்கைக்கும் இடையிலான சித்தாந்த மோதலால் இரு தரப்புக்கும் ஆரம்பம் முதலே ஆகாது.
பெரியாரின் திராவிட சித்தாந்தம் தமிழகத்தில் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளதால் தான் பாஜகவால் தமிழகத்தில் இதுநாள் வரை காலூன்ற முடியாமல் தவித்து வந்தது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கிட்டத்தட்ட பெரியாரின் சமூக நீதி கொள்கையை கடந்த 50 ஆண்டுகளாக தீவிரமாக பின்பற்றி ஆட்சி செய்து வருகின்றன,

பெரியாரிஸ்ட்
கடவுளை இழிவுபடுத்திவிட்டதாக இன்று வரை பாஜக தலைவர்கள், பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் குஷ்பு சேர்ந்துள்ளார். இவர் இயல்பிலேயே பெரியாரிஸ்ட்டும் கூட. பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் நடித்திருந்தார்.

குஷ்பு அதிரடி பேட்டி
இந்நிலையில் பாஜகவில் நேற்று சேர்ந்த குஷ்பு இன்று பாஜகவின் மாநில அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான். பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார். நானும் அவரைப்போல் குரல் கொடுப்பேன். என்று தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

எதிர்க்கட்சிகளின் வேலை என்ன
தொடர்ந்து பேசிய குஷ்பு, ஒரு கட்சியை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் பல காரணம் இருக்கும். எதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளும் கட்சியை எதிர்த்து பேசினேன். எதிர்க்கட்சிகளின் வேலையே அதுதான். ஆளும் கட்சி ஏதேனும் திட்டம் கொண்டு வந்தால் அதில் தவறுகளை கண்டுபிடித்து விமர்சித்தேன். ஆனால் அதேநேரம் பிரதமர் மோடி கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை திட்டத்தை ஆதரித்தேன். இதற்கு முன்பு முத்தலாக் தடைக்கும் நான் ஆதரித்தேன். இப்படி பல சமயங்களில் பிரதமர் மோடியை பாராட்டி உள்ளேன்.

சீனியர்கள் போட்டியிடுவார்கள்
டிவி விவாதங்களில், பலமுறை சந்திக்காததற்கு காரணம், எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. எதிர்த்தால் ஏதாவது தீர்வு இருந்தால் எதிர்க்கலாம். ஆனால் இப்போது எதிர்க்கும் ஜிஎஸ்டி, வேளாண் மசோதா உள்பட பல திட்டங்களை ஆரம்பித்தது காங்கிரஸ் தான். அதை பாஜக செயல்படுத்தி உள்ளது. எனவே எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்ககூடாது. பாஜகவில் நான் நேற்று தான் சேர்ந்துள்ளேன். தேர்தலில் முக்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தான் போட்டியிட வேண்டும். என்னைவிட அவர்களுக்குதான் அதிகம் தெரியும். நான் கட்சி சார்பில் போட்டியிட போவது இல்லை. சீனியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications