உயிருக்கு போராடறார் அண்ணன்.. 4 நாளாக வெண்ட்டிலேட்டர் உதவி.. குஷ்பு பரபரப்பு ட்வீட்.. திரண்ட கட்சிகள்
குஷ்பு தன் உடல்நிலை குறித்து ட்வீட் ஒன்றினை உருக்கமாக பதிவிட்டுள்ளார்
சென்னை: "என் அண்ணன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்... ஆபத்தான நிலையில் இருக்கும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவர், விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குஷ்பு உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.. இதையடுத்து, ரசிகர்களும் தொண்டர்களும் குஷ்புவின் சகோதரருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நகத்கான். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இருக்கிறார் குஷ்பு. ஆனால், எப்போதுமே தான் ஒரு முஸ்லிம் என்று குஷ்பு காட்டிக்கொண்டதே இல்லை.
குஷ்பு எப்போதுமே எந்த கருத்தையும் வெளிப்படையாகவே சொல்பவர்.. அவர் காங்கிரஸில் இருந்தபோதுகூட, ராகுல் மீதே பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டியவரும் கூட... யாருக்கும் எதற்காகவும் பயப்படாதவர்..

ஸ்பெஷல் கவனம்
பாஜகவின் தேசிய செயற்குழு - சிறப்பு அழைப்பாளராக இருந்தபோதிலும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால், குஷ்பு தன் ஆதங்கத்தை மறக்காமல் தெரிவித்தது மிகுந்த கவனத்தை ஈர்த்தது... திராவிட சித்தாந்தத்தை பற்றி குஷ்பு அறிந்து வைத்துள்ளதும், தொடர்ந்து தன்னுடைய துணிச்சலில் உறுதியாக இருப்பதும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்காக கொந்தளித்து கண்டிப்பதும், வரவேற்புக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இதை பாஜகவும் கவனிக்கவே செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை..

ஆக்டிவ்
அதேசமயம், குஷ்புவின் செயல்பாடுகள் பாஜகவுக்கு அடித்தளமாக இருந்தும் வருகின்றன.. எப்போதுமே குஷ்பு சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார்.. ஆனால், கடந்த சில தினங்களாகவே, ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவையும் போடாமல் இருந்தார்... குஷ்புக்கு என்ன ஆச்சு? என்று அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி கொண்டே இருந்த நிலையில், தற்போது அவரே அது குறித்து இன்று விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.. ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

வெண்டிலேட்டர்
"தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான், நான் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்தேன்... காரணம், என் மூத்த அண்ணன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்... இப்போது அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது... அவருக்காக நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்... பிரார்த்தனை செய்யுங்கள்" என்று உருக்கமாக கேட்டு கொண்டுள்ளார்.

ராதாகிருஷ்ணன்
குஷ்புவின் இந்த ட்வீட்டினை அடுத்து, பாஜக மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உட்பட பலரும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் சகோதர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்... காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி ராமச்சந்திரனும், சகோதரருக்காக வேண்டிக்கொள்வதாக ட்வீட் பதிவிடுள்ளார்.. மேலும், ஏராளமான தொண்டர்களும், ஆதரவாளர்களும், குஷ்புவுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து வருகிறார்கள்.. சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications