கிளாம்பாக்கத்தை விடுங்க.. சென்னையில் திறக்கப்படும் பிரமாண்ட பேருந்து நிலையம்! பயணிகளுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: சென்னையை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. அப்போது நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதற்குள் திறக்கப்படுமா?என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. நகரில் ஏற்படும் வாகன போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கம் ஆகியவைகளுக்கு தீர்வு காண வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் சென்னை புறநகர் பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய பேருந்து நிலையம்
இதில் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையம் பிரமாண்டமாக அமைக்கபட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பராமரிப்பிலும் பக்காவாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், சேலம் திருச்சி, கடலூர் என பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்
ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னையை அடுத்த திருமழிசை குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
24.8 ஏக்கர் நிலத்தில் ரூ. 336 கோடி செலவில் இந்த பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. 5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்து வரும் இந்த பேருந்து நிலையத்தில், ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, போலீஸ் நிலையம் ஆகியவையும் கட்டப்பட உள்ளன.
ரூ.427 கோடி மதிப்பீட்டில்
இதனால் பேருந்து நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்ந்தது. தற்போது பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் பணிகள் முடிந்துவிட்டன. இதனால் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே நிலவி வருகிறது. இந்த பேருந்து நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் திறக்கப்படுகிறது. எனினும், அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.
அப்போது நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அதற்குள் திறக்கப்படுமா?என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் எஞ்சியுள்ள பணிகளை இறுதி கட்ட பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியுள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும் திறக்கப்படும் என்று தெரிகிறது.
என்னென்ன வசதிகள் உள்ளன
குந்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் நிலையம் போன்று பிரம்மாண்டமாக நவீன வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் திறப்புக்கு பிறகு, இங்கிருந்து தான், பெங்களூர், கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பேருந்துகள், தனியார் சேவைகளுக்காக 30 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகத்தின் 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேருந்து நிலையத்தில் டிரைவர்கள், கண்டகர்கள் தங்கும் இடம், கடைகள், பைக்குகள் நிறுத்துமிடம், உணவகம், குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளும் மல்டி லெவல் கார் பார்க்கிங்கும் அமைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications