பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார்... எல்.முருகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் முருகன் இன்றும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 200 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன் தேர்தல் பணிகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அரசியல் கட்சிகள்
தேர்தல் திருவிழா வந்துவிட்டாலே அரசியல் கட்சி நிர்வாகிகள் காட்டில் பணமழை அடைமழையாக பொழியும் என்பது ஊரறிந்தது. கிளைச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை பண மழையில் நனைவார்கள். பாவம் வேட்பாளர்கள் பாடு தான் திண்டாட்டமாக இருக்கும். சேமிப்புகள் அனைத்தையும் மொத்தமாக ஒரே மாதத்தில் கரைத்துவிடுவார்கள். இதில் வெற்றிபெற்று மீண்டுவிட்டவர்கள் பாடு பரவாயில்லை. தோல்வியுற்றவர்கள் கதையை சொல்லவே தேவையில்லை, அந்தளவிற்கு அவர்கள் நிலை மோசமாகிவிடும்.

திமுக; அதிமுக
தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுகவில் நிர்வாகிகளுக்கு பரிசளிக்கும் வழக்கம் ஏற்கனவே உள்ளது. டிவிஎஸ் எக்.எல். இருச்சக்கர வாகனம், எல்.இ.டி. தொலைக்காட்சி, ஒரு சவரன் தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, குண்டா என தேர்தல் நேரத்தில் பரிசுப் பொருட்கள் தரப்படும். நிர்வாகிகளின் தகுதிக்கேற்பவும், செயல்படும் திறனுக்கேற்பவும் இந்த பொருட்கள் கொடுக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்படும்.

முதல்முறையாக
இதனிடையே முதல்முறையாக தேசியக் கட்சியான பாஜகவிலும் நிர்வாகிகளுக்கு பரிசளிக்கப்படும் எனப் பேசி உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் எனக் கூறி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் முருகன்.

மக்களை ஈர்ப்பார்
எம்.ஜி.ஆரை போல் மக்களை ஈர்க்கும் சக்தியும் ஆற்றலும் பிரதமர் மோடிக்கு உள்ளதாகவும், தேர்தல் பணிகளை சுணக்கமின்றி மேற்கொண்டால் பாஜகவுக்கு வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகள் மத்தியில் கூறியுள்ளார் முருகன். மேலும், பாஜக கைகாட்டும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications