முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்.. தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு!
சென்னை: தமிழக முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமிபதி ஐஏஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டார். சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் இப்படி அதிரடி மாற்றம் நடந்த நிலையில், தற்போது முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி தற்போது பதவி வகித்து வரும் நிலையில், முதல்வரின் இணை செயலாளராக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது முதல்வர் இணை செயலாளராக இருக்கும் லட்சுமிபதி ஐஏஏஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு சப் கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டதின் 27 வது புதிய ஆட்சியராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். தூத்துக்குடியில் கிட்டதட்ட ஓராண்டு காலமாக திறம்பட பணியாற்றிய லட்சுமிபதி ஐ.ஏ.ஏஸ் தற்போது முதல்வரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications