ஆசை ஆசையாக காத்திருக்கும் லாலு.. பீகாரில் திருப்பி போடப்படும் "ரொட்டி"? அப்ப முதல்வர் வேட்பாளர் இவரா
சென்னை: பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததுமே இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின.. இதில், தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான கணிப்புகளில் தெரியவந்துள்ளது.. அதேபோல, பீகாருக்கான முதலமைச்சராக விருப்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் சதவீதமும் வெளிவந்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட முடிவில் இந்த கணிப்புகளின் விவரம் வெளியாகியிருக்கிறது.
243 சட்டசபை தொகுதிகள் உள்ள பீகாருக்கு முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில், பீகார் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் பதிவாகியது. கடந்த 25 ஆண்டுகளில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியதும் இதுவே முதல் முறையாகும். அதேபோல மிச்சமுள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது..

இதையடுத்து, இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியாகின.. அதில் பெரும்பாலும் என்டிஏ கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பாஜகவுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
என்டிஏ கூட்டணிக்கு சாதகம்
அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தலின் எதிர்பார்ப்பு ஒரேடியாக எகிறியது.
243 தொகுதிகளில் தங்கள் வாக்குகளை செலுத்தி முடித்துள்ளனர். நிதீஷ் குமாரின் நீண்ட ஆட்சிக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் சவாலுக்கும் இடையேயான கடுமையான போட்டி இந்த தேர்தலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது.
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு பீகாரில் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது, SIR நடவடிக்கைக்கு எதிரானவை என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தன.. ஆனால், அந்த கணிப்புகளை எல்லாம் தற்போது வெளியாகியிருக்கும் எக்ஸிட் போல்கள் நொறுக்கிவிட்டன.
முதலமைச்சர் யார்?
அதேபோல பீகாருக்கான முதலமைச்சர் யார் வரலாம் என்று விருப்ப தேர்வு செய்யப்பட்டவர்களின் சதவீதமும் தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி, பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட முடிவில், தேஜஸ்வி யாதவ்: 32% நிதிஷ் குமார்: 30% பிரசாந்த் கிஷோர்: 8% சிராக் பாஸ்வான்: 8% சாம்ராட் சவுத்ரி: 6%, ராஜேஷ் குமார்: 2% மற்றவர்கள்: 14% என்று கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது..
இந்த கணிப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. காரணம். கடந்த சில மாத காலமாகவே, பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்தபடியே உள்ளது..
முதல்வர் நாற்காலி
20 வருடங்களாக முதல்வர் நாற்காலியை தன்வசம் வைத்திருக்கும் நிதிஷ் குமாருக்கும், முதன்முறையாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கும் 35 வயது தேஜஸ்வி யாதவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
அதனால்தான், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் இந்த முறை நேரடியாகவே களமிறங்கி மகனுக்காக பிரச்சாரம் செய்தார்.. நிதிஷுக்கு 20 வருடங்கள் கொடுத்தது போதும் என்று மக்களிடமே லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை வைத்தார்..
லாலு போட்ட ரொட்டி பதிவு
அதுமட்டுமல்ல, "சூடான தவாவில் ரொட்டியை திருப்பிப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கருகிவிடும்... 20 வருடங்கள் என்பது மிகவும் நீண்டது, அது போதும்.. புதிய பீகாருக்கு தேஜஸ்வி தலைமையிலான அரசு முக்கியம்" என்ற லாலுவின் பதிவு பீகார் மக்களின் கவனத்தை திருப்பியது.
லாலுவின் பேச்சுக்கள் ஒருபுறம் இப்படியென்றால், அமித்ஷாவின் பேச்சுக்களும் கிட்டத்தட்ட நிதிஷூக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது..
அமித்ஷா பேட்டி
முக்கியமாக, ஒரு சேனலுக்கு அமித்ஷா அளித்திருந்த பேட்டியில், "முதலமைச்சர் வேட்பாளரை நான் எப்படி தேர்வு செய்ய முடியும்? கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு ஆலோசிக்கப்படும்" என்று கூறியிருந்ததே நிதிஷூக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஏற்கனவே கூட்டணியில் நிதிஷ் இருந்தாலும், பாஜகவுடனான உறவு அவருக்கு சுமூகமாக இல்லை என்றும் கூட்டணியில் அவரது முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் சலசலப்புகள் எழுந்த நிலையில், நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் பாஜகவின் தயக்கமும் இதில் சேர்ந்து கொண்டுவிட்டன.
நிதிஷ் குமாருக்கு சான்ஸ் இல்லையா?
இந்நிலையில்தான் இன்று மாலை வெளியான எக்ஸிட் போலில், தேஜஸ்வி யாதவ் 32% நிதிஷ் குமார் 30% என்று மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்திருக்கிறார்கள்..
இது வெறும் கணிப்பு என்றாலும், நிதிஷ் குமார் அரசியல் மீதான சலிப்பையும், மாற்றத்துக்கான தேடலையும் நோக்கி பீகார் மக்கள் நகர்கிறார்களோ? என்ற சந்தேகத்தை வலுவாக்கியிருக்கிறது இன்றைய எக்ஸிட் போல் முடிவுகள்...!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications