நிலப்பட்டா மாறுதல்.. பட்டா, பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா? இதோ சிம்பிள்
சென்னை: ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி அறியலாம் தெரியுமா?
பட்டா என்பது சொந்த வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறையே நேரடியாக வழங்குகிறது... இந்த ஆவணத்தில், உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பட்டா மாறுதல் : பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை, பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக நில உரிமையாளர்கள் விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகே பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.
ஆனாலும், இ-சேவை மையம் மூலம் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருதினார்கள். அதனால்தான், முதல்வர் ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இணைய சேவை: அந்தவகையில், எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இப்படி இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கோ, தாலுகா ஆபீசுககோ அலைய வேண்டியதில்லை.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். முக்கியமாக இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை..
அதேபோல, பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால், www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற வெப்சைட்டின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.
யார் பெயர்: அதேபோல, ஒரு நிலத்தினுடைய பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? இதற்கும் ஆன்லைனிலேயே வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறது நம்முடைய தமிழக அரசு..
- https://tnreginet.gov.in/ என்ற அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் "வில்லங்க சான்றிதழ்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு வில்லங்க சான்று விவரங்கள் பார்வையிடுதல் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.. இப்போது ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும். அதில் வில்லங்கச் சான்று என்பதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.
- "திருத்த இயலாநிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களின் பத்திரம் ஸ்கிரீனில் தோன்றும். அதில் பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை நீங்களே நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளலாம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications