அசால்ட்.. கும்மிருட்டில் போர் விமானத்தை தரையிறக்கி சாதனை.. இந்திய கடற்படையின் அசத்தல் வீடியோவை பாருங்க
சென்னை: இந்திய கடற்படை தொடர்ந்து அப்டேட் ஆகி வரும் நிலையில், தற்போது நள்ளிரவில், கும்மிருட்டில் மிக்-29K ரக போர் விமானத்தை ஓடும் கப்பலில் இறக்கி சாதனை படைத்திருக்கிறது.
தீபகற்ப நாடாக உள்ள இந்தியாவுக்கு கடற்படை இன்றியமையாத ஒன்றாகும். உலக நாடுகள் பல சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கடற்படையை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல் கட்டுமானம் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. மட்டுமல்லாது கடல் குறித்த நுண்ணறிவையும் பெற்றிருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கடல் வணிகம் கொடி கட்டி பறந்தது. தமிழர்கள் பல மேற்கு நாடுகளுடன் தொடர் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன.

இப்படியாகத்தான் இந்திய கடற்படை படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போதைய நிலைமைக்கு வந்திருக்கிறது. இது தொடர்ந்து தன்னை மேலும் அப்டேட் செய்துக்கொண்டிருக்கிறது, கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கடல் பரப்பில் சூப்பர் சோனிக் வேகத்தில் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.
இந்த ஏவுகணை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் செல்வது சூப்பர் சோனிக் வேகம் எனப்படுகிறது. இது மாக்-1 வேகம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்கவும், ஒரு இடத்தில் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பித்து செல்லும் இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.
#WATCH | Indian Navy achieves another historic milestone by undertaking the maiden night landing of MiG-29K on INS Vikrant. This is indicative of Navy’s impetus towards aatmanirbharta: Indian Navy
— ANI (@ANI) May 25, 2023
(Video: Indian Navy) pic.twitter.com/VxmKZdTssx
அவ்வளவு பெரிய வனத்தில் மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் ஒரு விமானத்தை கண்டுபிடித்து அழிப்பதற்கு தனித்திறன் அவசியம். இப்படி இருக்கையில், இந்த சவாலை சமாளிக்க பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை புதிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
இந்த சோதனை உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியிருந்து. இந்நிலையில் மற்றொரு சாதனையை கடற்படை நிகழ்த்தியிருக்கிறது. அதாவது கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நள்ளிரவில் வெளிச்சம் எதுவும் இல்லாமல் மிக்-29கே ரக போர் விமானத்தை கடற்படை வீரர்கள் அசால்ட்டாக தரையிறக்கி அசத்தியுள்ளனர்.

14 அடுக்குகள், 2,300 அறைகள் என சுமார் 40,000 டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பலை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பலின் விலை ரூ.20,000 கோடியாகும். இதில் 1,700 வீரர்கள், 34 போர் விமானங்கள், மற்றும் சில ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்க முடியும். 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் இந்த போர்க்கப்பல் தண்ணீரில் மணிக்கு 52 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாகும்.
இந்த விமானத்தில் தற்போது போர் விமானங்களை தரையிறக்குவது, டேக் ஆஃப் செய்வது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் ஓர் அங்கமாக நேற்றிரவு மிக்-29கே ரக போர் விமானம் இந்த கப்பலில் தரையிறக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வெளிச்சம் எதுவும் இல்லாத நிலையில் வெறும் விமானத்தின் விளக்குகளை கொண்டு மட்டுமே இது தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications