Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரவுடிகளுடன் கூட்டு.. கஞ்சா சப்ளை? பற்ற வைத்த டிஜிபி.. கொந்தளிக்கும் வழக்கறிஞர்கள்! என்ன தான் ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவுடிகள் சிலருடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறையில் ரவுடிகளை சந்திக்கும் போது அவர்களுக்கு கஞ்சா உள்ளிட்டவற்றை கொடுப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிஜிபியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் தமிழகத்தில் உள்ள மாநகர காவல் ஆணையர்கள், ஐஜிகள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

shankar jiwal lawyers chennai

அதில்," கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும் 546 முறை சந்தித்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன. குறிப்பாக சில வழக்கறிஞர்கள், கைதிகளைச் சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது.

தொடர்ந்து கண்காணித்தபோது, சில வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது. மேலும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், சிவில் விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப் பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கைதிகளை சந்திக்க விரும்பும் வழக்கறிஞர்கள், அவர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களுடன், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவர் சட்ட ஆலோசகர்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்களை அவர் சரிபார்த்து, கைதிகளைச் சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிப்பார். கைதிகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது தெரியவந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக டிஜிபியின் சுற்றறிக்கை வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.

அதில், தமிழக டிஜிபியின் சுற்றறிக்கை வழக்கறிஞர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை டிஜிபி திரும்ப பெற வேண்டும். அவரது அறிக்கை வழக்கறிஞர்களை நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும் வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. கைதிகளை தங்கள் கட்சிக்காரர்கள் என்ற அடிப்படையில் வழக்கறிஞர்கள் சந்தித்து பேச அனைத்து சட்டரீதியான உரிமைகளும் இருக்கிறது. அந்த உரிமைகளை பறிப்பது போல டிஜிபியில் சுற்றறிக்கை இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கார்த்திகேயன்," வழக்கறிஞர்கள் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு சதித்திட்டத்தில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கை பாதிக்க செய்கின்றனர் என தமிழ்நாடு டிஜிபி தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அத்தகவலானது வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான செயல்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

மேலும் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டு நசுக்குவதற்காகவும் இந்த கூற்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். சிறைச்சாலைகளில் ஏற்படுத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் வெளியில் தெரியாது. மேலும் காவல்துறையினரின் அதிகாரம் மேலோங்கி சட்டரீதியாக எவருமே கேள்வி கேட்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்.

இது தவிர இவ்வாறு வழக்கறிஞர்கள் சிறைச்சாலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சட்ட உரிமைகளை காப்பாற்றுவதற்காக மற்றும் வழக்கு குறித்து தகவல்கள் சேகரிக்க சொல்வதை தடை செய்வதற்காக சிறைச்சாலைகளில் நேர்காணல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும். எனவே தமிழ்நாடு டிஜிபி-ன் சுற்றறிக்கை சட்டப்படி நியாயப்படியும் ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. இதுகுறித்து தமிழக பார் கவுன்சில் மற்றும் தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள் தகுந்த நிலைப்பாட்டை எடுத்து அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமைகளை மீட்டெடுக்க உதவும் எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+