சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட்கா ஊழல் புகாரை முதலில் விசாரிக்கட்டும்.. ஆதாரம் இருந்தால் பார்க்கலாம்.. அன்புமணி பல்டி!

குட்கா ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பாமக அதில் நிலைப்பாடு எடுக்கும் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம் - அன்புமணி விளக்கம்!-வீடியோ

    சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பாமக அதில் சரியான நிலைப்பாடு எடுக்கும் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    அதிமுக பாமக கூட்டணி லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி உறுதியாவதற்கு முன் பாமக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது.

    முக்கியமாக குட்கா ஊழல் புகார் தொடர்பாக புகார்களை பாமக அடுக்கியது. இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு பின் முதல்முறை பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குட்கா ஊழல் குறித்து பேசியுள்ளார்.

    சட்டமன்ற இடைத்தேர்தல்

    சட்டமன்ற இடைத்தேர்தல்

    அன்புமணி தந்த பேட்டியில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். பென்னாகரம் தேர்தலின் போதே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம். அதிமுகவிற்கு இடைத்தேர்தல் அதனால்தான் ஆதரவு அளிக்கிறோம்.

    கொள்கையை விட மாட்டோம்

    கொள்கையை விட மாட்டோம்

    எங்கள் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.நான் போராட வேண்டிய இடத்தில் போராடுவோம், வலியுறுத்த வேண்டிய இடத்தில் , வலியுறுத்துவோம். நாங்கள் திமுக, பாஜக, அதிமுகவை விமர்சனம் செய்தோம். அப்போது வெளியே இருந்து விமர்சனம் செய்தோம், இப்போது உள்ளிருந்து அழுத்தம் கொடுப்போம்.

    அதேதான்

    அதேதான்

    விஜயகாபாஸ்கருக்கு எதிரான புகார் மீதான விசாரணை முடியட்டும். இப்போதுதான் விசாரிக்கிறார்கள். விசாரணை நடக்கட்டும். ஆதாரங்கள் எல்லாம் வெளியே வரட்டும். அப்படி ஆதாரங்கள் எதுவும் இருந்தால் என் நிலைப்பாட்டை சொல்கிறேன்.

    வாக்கு கிடைக்கவில்லை

    வாக்கு கிடைக்கவில்லை

    எங்களை எல்லோரும் பாராட்டினார்கள்; ஆனால் ஓட்டு போடவில்லை. அதனால் இந்த தேர்தலில் வியூகத்தை மாற்றியுள்ளோம். 4 தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம். மக்களுடன் ஆலோசித்துவிட்டுத்தான் நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

    English summary
    Let see after investigation, PMK Anbumani takes a new stand in Gutka Scam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X