வெளியே பெட்ரோல் குண்டு வெடிக்க.. உள்ளே ஆளுநர் ரவி என்ன செய்துகொண்டு இருந்தார் தெரியுமா? இத பாருங்க
சென்னை: ராஜ்பவன் வெளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்த சமயத்தில் ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றி பார்ப்போம்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்த, எப்போதும் போலீசார் புடை சூழ்ந்து இருக்கும் அப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டை வீசி சென்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போதுதான் அவர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் 3 பெட்ரோல் குண்டுகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். இவர் கடந்த ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் அமைந்து உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஜாமினில் வெளியே வந்து உள்ளார்.
Governor Ravi launched a Campaign against Drug and promoting awareness and creating #DrugFree Society, being organised by Institute of Research and Development for the Rural Poor Trust, at Raj Bhavan, Chennai. pic.twitter.com/9udIGIQvzn
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 25, 2023
இந்த நிலையில் அதே ரவுடி தமிழ்நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரின் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உடனே ரவுடி வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. நாளை தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வர இருக்கும் சூழலில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ள பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தின் இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தாக்குதலின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளேதான் இருந்தாரா? அங்கு என்ன செய்துகொண்டு இருந்தார் என்ற கேள்விகள் எழுந்து உள்ளன. இதற்கான விடையை ஆளுநர் மாளிகையே எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.

அதன்படி ஆளுநர் ரவி சில முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டு உள்ளது தெரியவந்து உள்ளது. "ஆளுநர் ரவி அவர்கள் இன்று ராஜ் பவனில், இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பு ஏற்பாடு செய்த மார்பக புற்றுநோய் பரிசோதனை - கிராமப்புற பிரசாரத்தை துவக்கி வைத்தார்." என அதன் எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டு உள்ளது. அதேபோல் "ஆளுநர் ரவி அவர்கள், சென்னை ராஜ் பவனில், கிராமப்புற ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் & அறக்கட்டளை ஏற்பாடு செய்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருளில்லா சமூகத்தை உருவாக்கும் பிரசாரத்தை துவக்கி வைத்தார்." என்று ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications