8 வயது பிஞ்சுக்கு பாலியல் தொல்லை.. யோகா டீச்சருக்கு சாகும் வரை சிறை! சென்னை போக்சோ கோர்ட் அதிரடி
சென்னை: 8 வயது மிஞ்சு குழந்தையிடம் யோகா ஆசிரியர் அத்துமீறிய சம்பவத்தில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
சமீப காலங்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக மைனர் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் கணிசமாகவே அதிகரித்து வருகிறது..
பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்களே மூலமே பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் குட் டச், பேட் சட் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

குழந்தைகள்
குழந்தைகள் யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற துணிச்சல் காரணமாகவே பெரும்பாலான மனித மிருகங்கள் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதையும் தாண்டி சொல்லும் குழந்தைகளை பெரும்பாலும் பெற்றோர்களை நம்புவதில்லை என்பது தான் சோகம். குழந்தைகள் எதோ அறியாமல் சொல்வதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

யோகா டீச்சர்
அப்படிச் செய்யாமல் குழந்தைகள் என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதைப் பெற்றோர் பொறுமையாகக் கேட்க வேண்டும் என்றே சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி குழந்தை தைரியமாகப் பெற்றோரிடம் கூறியதால் யோகா ஆசிரியர் ஒருவர் இப்போது தண்டிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ்.

பாலியல் தொல்லை
அதே பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் இவரிடம் யோகா பயிற்சிக்குச் சென்று உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் ஜூலை 6ஆம் தேதி அப்படித்தான் வழக்கம் போலப் பள்ளி முடிந்ததும் யோகா பயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் யோகா கற்றுத் தருவதாகக் கூறி, அத்துமீறிய ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

கைது
அன்று யோகா கிளாஸ் முடிந்ததும் வீடு திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசாரில் புகார் அளித்தனர். அதன்படி யோகா டீச்சர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை
வழக்கு நடைபெற்ற போது, சிறையில் இருந்து ஞானராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இருந்த போதிலும், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பை வழங்கினார். யோகா ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால் மரிய ஞானராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications