கள்ளச்சாராயம் விற்றால் இனி அவ்வளவுதான்.. அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி நேற்று ஒப்புதல் வழங்கிய நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்பது கடுமையாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த மதுவிலக்கு திருத்த சட்டம் இடமளிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 66 பேர் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணமாகினர்.

இந்த விவகாரம் கடந்த மாதம் நடந்த சட்டசபையில் விவாதத்தை கிளப்பியது. அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா 2024யை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இன்று தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 அமலுக்கு வந்துள்ளதால் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். மேலும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மதுவிலக்கு திருத்த சட்டத்தின் 2024 முக்கிய சில பிரிவுகள் வருமாறு:
அதாவது மதுவிலக்கு சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பட்டால் ஓராண்டுக்கு குறையாமல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படுவதோடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கள்ளச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால் அதனை விற்பனை செய்பவர்கள் உள்பட அந்த சம்பவத்தில் தொடர்புடையர்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத்தொகை விதிக்கவும் இந்த சட்டம் இடம் அளிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications