சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுக் கடைகளில் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணை மதகுகள்- கமல்ஹாசன் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் மதுபான கடைகளில் சென்னை தவிர மற்ற இடங்களில் கடைகளை திறந்து கொள்ளலாம், என்று அரசு கடந்த மே 7ம் தேதி அறிவித்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் அங்கு மட்டும் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

Liquor shop opening in Chennai, Kamal Haasan opposing

இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் 18ம் தேதி முதல், அதாவது, செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

டவுசர் மாடல் உள்ளாடை...மது குடித்தாலும் மானத்துடன்...செல்லபாண்டியன் அழைப்பு!!டவுசர் மாடல் உள்ளாடை...மது குடித்தாலும் மானத்துடன்...செல்லபாண்டியன் அழைப்பு!!

Liquor shop opening in Chennai, Kamal Haasan opposing

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?. இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
As the corona is not found only in liquor stores, will the liquor dam sluices be opened in Chennai tomorrow? Thus Kamal Haasan has raised the question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X