இதான் ஸ்டாலின்.. சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக லைவ் ஒளிபரப்பு.. சொன்னதை செய்தார் கருணாநிதி மகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன
சென்னை : தமிழக கவர்னர் சட்டசபையில் உரையாற்றியது, அரசு கேபிள், 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேற்று நேரடியாக ஒளிபரப்பானது.
Recommended Video

தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது..
காரணம், தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்போது, அதன் நிகழ்வுகளையும் விவாதங்களையும் அரசு நேரடியாக ஒளிபரப்பு செய்வதில்லை..
லைவ்
அப்படியே அரசு சார்பில் ஒளிபரப்பானாலும் அது எடிட் செய்யப்பட்ட வீடியோக்களே மீடியாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சட்டசபையில் தங்கள் தொகுதி தலைவர்கள், உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மக்களால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.. இதை தெரிந்து கொள்ளும் உரிமையும் மக்களுக்கு உள்ளதால், நிகழ்வுகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது...

நாடாளுமன்றம்
மேலும், நாடாளுமன்ற விவாதங்களையே லைவ் செய்யும்போதும் சட்டசபை விவாதங்களை ஏன் லைவ் செய்யக் கூடாது என்றும் கேட்கப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம் என்று தேர்தல் வாக்குறுதியாகவே திமுக அளித்தது.. அதன்படியே ஆட்சியும் அமைந்தது.. சட்டப்பேரவை, பட்ஜெட் கூட்டத்தொடர்களும் நடந்தன.. ஆனால் நேரலை ஒளிபரப்பாகவில்லை. இதையும் அதிமுக கேள்வி எழுப்பியது.

கமல் ட்வீட்
இதை மநீம கமலும் கேட்டிருந்தார்.. தனது ட்விட்டரில், "பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்" என விமர்சித்திருந்தார். ஆனால், இதற்கும் அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

விளக்கம்
இதற்கெல்லாம் கடந்த முறை நடந்த பேரவையில் விளக்கம் தந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின்.. அப்போது, "10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று ஒரு முறை அல்ல பல முறை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. இங்கு கலைவாணர் அரங்கில் சில குறிப்பிட்ட காரணங்களால் எங்களால் நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை நடைபெறும்போது, நிச்சயமாக அதை நாங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வோம்" என்று பதிலளித்தார்.

நேரடி ஒளிபரப்பு
இந்த முறையும் கலைவாணர் அரங்கிலேயே சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.. எனினும் தான் சொன்னதை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல்முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது... காலை 10 மணிக்கு வினாக்கள்-விடைகள் நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்க போகிறார்கள்..

நேரலை
சட்டப்பேரவை நிகழ்வுகள் @TNDIPRNEWS செய்தி துறையின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலும் நேரலை செய்யப்படுகிறது... மேலும் அரசு கேபிள் டிவி சேனலிலும் நேரலை செய்யப்படுகிறது. இதன்மூலம் மற்றொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையும் இன்றைய தினம் நிறைவேறி உள்ளது..!
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications