Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி வங்கி இஎம்ஐயை செலுத்த தவறினால்.. போன் முடக்குவார்களா? நோ சொன்ன ஆர்பிஐ.. பெரிய திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) ஸ்மார்ட்போன் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் சாதனங்களைத் தொலைதூரத்தில் முடக்குவதைத் தவிர்க்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதையடுத்து கடன் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நிலுவைத் தொகைகள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றன என்ற புதிய புள்ளி விவரம் அறிவித்துள்ளது.

கடன் தவணை செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் விரைவில் வழங்கப்படலாம் என்று சமீபத்தில் கூறப்பட்டது.

phone emi

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்தத் தயாராகி வருவதால், இந்த நடவடிக்கை சாத்தியமானது. ஒரு நபர் லோன் வாங்கி அதை கட்டாமல் இருந்தால் இந்த குறியீடு உயரும். இப்படி கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

போன் வங்கி லோன்

இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் இஎம்ஐ மூலம் போன் வாங்கி அதற்கு லோன் கட்டாமல் இருந்தால் அதை லாக் செய்யும் வழிமுறைகளை வங்கிகள் செய்யும். பல மாதங்களாகக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வந்த இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை தற்போது அமலுக்கு வர உள்ளது. EMI மூலம் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்குவது சரிதானா.. என்ற கேள்வியை இது நுகர்வோர் மத்தியில் எழுப்பியுள்ளது. இதனால் EMI மூலம் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் விற்பனை பெரிய அளவில் சரியும் வாய்ப்புகள் உள்ளன.

லோன் - மொபைல் போன்களைச் செயலிழக்கச் செய்ய அனுமதி

கடன் தவணை செலுத்தாத ஒருவரிடமிருந்து சாதனத்தை நேரடியாகப் பெறுவது வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சாத்தியமில்லை என்பதால், மென்பொருள் மூலம் அவர்களைத் தண்டிப்பது ஒரு எளிதான வழியாகும். முன்மொழியப்பட்ட விதிமுறைகளின்படி, வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFCs) ஒருவர் கடன் தவணைகளை செலுத்தத் தவறினால், கடன் மூலம் வாங்கப்பட்ட மொபைல் போன்களைச் செயலிழக்கச் செய்ய அனுமதிக்கப்படும்.

தற்போது, இந்த வசதி Google Device Lock Controller, Samsung Finance+ (சாம்சங் சாதனங்களுக்கு மட்டும்) அல்லது பிற மூன்றாம் தரப்பு லாக் செய்யும் செயலிகள் மூலம் செயல்படுகிறது. இவை சாதனம் வாங்கும் போது நிறுவப்படுகின்றன. இந்தச் செயலிகள் அவசரகால அழைப்புகள் போன்ற அத்தியாவசியச் செயல்பாடுகளைப் பாதுகாக்கும்.

புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டால், கடன் நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, கடன் தவணை செலுத்தாதவர்களின் போன்கள் முடக்கப்படலாம். இதே வசதி வரும் காலங்களில் கார்கள், டிவி,கணினி போன்ற சாதனங்களில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளன. ரிமோட் லாக் வசதியைச் செயல்படுத்துவதற்கு முன்பு, கடன் வழங்குநர்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து வெளிப்படையான சம்மதத்தைப் பெற வேண்டும்.

எப்படி செயல்படும்?

நீங்கள் ஒரு போன் வாங்குகிறீர்கள் என்றால் அது இஎம்ஐ மூலம் இருக்கும் பட்சத்தில் இந்த செயலி அதில் இன்ஸ்டால் செய்யப்படும். அதை அன்-இன்ஸ்டால் செய்ய முடியாது. அதன்பின் நீங்கள் இஎம்ஐ காட்டாத பட்சத்தில் உங்கள் போன் லாக் ஆகும். emergency call என்ற ஆப்ஷன் மட்டுமே பயன்படுத்த முடியும். நீங்கள் போன் வாங்கும் போதே இதற்கு அனுமதி அளித்து கடிதம் தர வேண்டும்.

மக்கள் எதிர்ப்பு

ஆனால் மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து இந்த திட்டம் பின்வாங்கப்பட்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) ஸ்மார்ட்போன் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் சாதனங்களைத் தொலைதூரத்தில் முடக்குவதைத் தவிர்க்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடன் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நிலுவைத் தொகைகள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றன என்ற புதிய புள்ளி விவரம் அறிவித்துள்ளது.

கடன் தவணைகளைச் செலுத்தாதவர்களின் சாதனங்களை முடக்குவது போன்ற நடைமுறைகளை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியதிலிருந்து, மாதத்திற்கு மாதம் 20% நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. பலர் கடனை செலுத்துவது இல்லை. ஸ்மார்ட்போன் நிதிக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சில நிறுவனங்கள் நிலுவைத் தொகைகள் குவிந்ததையடுத்து, இந்தத் துறையில் கடன் வழங்குவது கணிசமாகக் குறைந்துள்ளது.

பல சமயங்களில் கடன் வழங்கும் நிறுவனம், ஸ்மார்ட்போனைப் பிணையாக வைத்துக்கொள்வதற்கு உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இனி அப்படி செய்ய முடியாது என்பதால் போன் லோன் வழங்குவது கணிசமாக குறைந்துள்ளது என்று வங்கி அல்லாத பைனான்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+