Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷயம் "இது"தான்.. இப்போதைக்கு "கடன் தள்ளுபடி" இல்லை.. சபையில் சொன்ன பிடிஆர்.. அதிர்ந்த அதிமுக

பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், விவசாய நகை கடன் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை என்பதால், இந்த முறைகேடுகளை தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்" என்று நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.. இதையடுத்து அதிமுக தரப்பு கதிகலங்கி போயுள்ளது.

Recommended Video

    Petrol விலை குறைப்பு முதல் பெண்களுக்கு பண உதவி வரை TNBudget-டின் டாப் 10 அறிவிப்புகள் விரிவான அலசல்!

    கடந்த முறை அதிமுக ஆட்சியில் அதிகம் பேசப்பட்டது எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்தான்.. அதிலும் ஆட்சியின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அதிலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிலும் குறிப்பாக பயிர்க்கடன் உத்தரவுதான் மக்களிடம் பெரும் நன்மதிப்பை பெற்று தந்தது.

    தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 2021 ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதில் அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பில்தான் கடந்த மாதம் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு புகார் எழுந்தது.

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அதாவது, பல சங்கங்களில் கடந்த ஜனவரி 31க்கு பிறகு வழங்கப்பட்ட நகைக் கடன்கள் முன்தேதியிட்டு பயிர்க்கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்துள்ளது அதிமுக அரசு தரப்பில்.. பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன்களையும் பயிர் கடன்களாக மாற்றியுள்ளனர்.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில்தான் அதிக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

     எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    அதுமட்டுமல்ல, பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன்களையும் பயிர் கடன்களாக மாற்றியது முதல் கடன் வழங்காமல் வைப்புத் தொகையாக மாற்றியது உட்பட எண்ணற்ற முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான், மறுபடியும் வெளி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஜூலை 15ம் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலை 100 சதவீதம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஒரு உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

    தாக்கல்

    தாக்கல்

    இதுசம்பந்தமான அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரமும் இன்னொரு சுற்றறிக்கையை அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியிருந்தார்.. ஏற்கனவே மாஜிக்களின் ஊழல்கள் மீது திமுக அரசு கவனத்தை திருப்பி வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வெளியிட்ட அறிவிப்பில் முறைகேடுகள் உள்ளதாக வந்த செய்திகள் பெரும் பரபரப்பை கூட்டியது...

     பயிர்க்கடன்

    பயிர்க்கடன்

    அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசியிருந்தார்.. "5 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17428.73 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பல பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில பேருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக தள்ளுபடி கடன் சான்றிதழை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

     ஐ.பெரியசாமி

    ஐ.பெரியசாமி

    இதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.12,100 கோடி அளவுக்கு அந்த தள்ளுபடியை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்... குறிப்பாக, அரசாங்கம் நபார்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தான் கொடுத்திருக்கிறார்கள். காரணம் அவர்களிடம் இருந்து பணம் வராது என்பதால்தான்.. 136 சங்கங்களில் கிட்டதட்ட ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ 108 கோடி அளவிற்கும், அதேபோல 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் அங்கே முறைகேடுகள் நடந்துள்ளது என்று புட்டு புட்டு வைத்திருந்தார்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    இப்படிப்பட்ட சூழலில்தான், ஏனைய பயிர்க்கடனை திமுக அரசு எப்போது தள்ளுபடி செய்யும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. ஒருவேளை அந்த அறிவிப்பு இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகுமா என்றும் கருதப்பட்டது.. ஆனால், அப்படி எந்த அறிவிப்புமே இன்று வெளியாகவில்லை.. மாறாக, பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லி நிதியமைச்ர் பிடிஆர் ஒரு விளக்கத்தையும் இன்று தந்துள்ளார்.

    முன்னுரிமை

    முன்னுரிமை

    அதில், ''கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது, இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.12,110.74 கோடி என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4 ஆயிரத்து 803 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

     அறிவிப்பு

    அறிவிப்பு

    இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்தபோது பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ள உண்மை தெரிய வந்துள்ளது. சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிகமான அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அடங்கலில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக அளவிலும் அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிரைத் தவிர வேறு பயிருக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிருக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாகவும் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

    திட்டம்

    திட்டம்

    குறிப்பிட்ட சில இடங்களில் அடங்கலே இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களைப் பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அனுமதி இல்லாமலும் தொகையைப் பெறாமலும் சில சங்கங்களில் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும் சில சங்கங்களில் திருப்பிச் செலுத்தப்பட்ட பல்வேறு கடன்களின் தொகையைக் கொண்டு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன..

     அதிமுக

    அதிமுக

    விவசாய நகை கடன் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. எனவே, இந்த முறைகேடுகளை தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் " என்று விளக்கம் தந்துள்ளார். முறைகேடுகளை திமுக அரசு ஆராய போவதாக அறிவித்துள்ளது, அதிமுக தரப்புக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+