நாளை 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி!
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவப்பூர் முத்து மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதம் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு நாளை, ஜனவரி 28 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கல்வி நாட்களில் எந்தவித குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், பக்தர்களால் 'தென் திருப்பதி' என அழைக்கப்படும் மிக முக்கியமான திருத்தலம். கரூர் - திண்டுக்கல் சாலையில், குஜிலியம்பாறை செல்லும் வழியில் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோயில்.
இந்நிலையில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications