Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம "ரூட்டை" பிடித்த சசிகலா.. அதிமுகவுக்குள் வீசும் இன்னொரு புயல்.. குழம்பும் தொண்டர்கள்.. என்னாகும்

சசிகலா 2 முக்கிய பிளான்களை கையில் எடுக்க போவதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் அதிமுக தன்னுடைய பரபரப்பை மேலும் குறையாமல் வைத்து வருகிறது.. இதையடுத்து அந்த கட்சியில் சில உரசல்களும், அதிருப்திகளும் அதிகமாகி கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக தலைமைகளின் புதிய பதவி, அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி, இவைகளுக்கு நடுவில் சசிகலாவின் புதிய யுக்தி போன்றவை குறித்த தகவல்கள் கசிந்து கொண்டே வருகிறது..

உண்மையிலேயே அதிமுகவுக்குள் என்னதான நடக்கிறது என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்ன கருத்து இதுதான்:

 ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

"ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே சசிகலாவுக்கு இது அதிர்ச்சியையே தந்துள்ளது.. அதற்கு பிறகுதான் தன்னுடைய அறிக்கை பாணியையே அவர் மாற்றினார்.. கடந்த வாரங்களில் அவர் அறிக்கையை எடுத்து பார்த்தாலே அது நன்றாக புரியும். ஆதரவாளர்களுக்கு இத்தனை நாள், மனம் தளர வேண்டாம் என்று நம்பிக்கையை மட்டும் தந்து கொண்டிருந்தவர், இந்த முறை அதிமுகவின் அதிருப்தியாளர்களையும் சேர்த்தே குறி வைத்துள்ளார்.. ஒருசிலரால் விரும்பத்தகாத செயல்கள் நடந்து கொண்டிருந்தாலும், விரைவில் சுமூக முடிவு வரும் என்று அவர்களுக்கு தெம்பூட்டி உள்ளார்.

 உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

அந்த வகையில் 2 முக்கிய பிளானையும் சசிகலா எடுத்துள்ளதுபோல தெரிகிறது.. அநேகமாக அனைவரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தை அவர் நடத்தக்கூடும்.. அவருடைய எண்ணம் இப்போதைக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் பலத்தை அதிகரித்து கொள்வதாகவே இருக்கிறது.. அதனால்தான் தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த உண்ணாவிரதத்தை நடத்தலாமா என்று யோசித்து வருகிறார்..

சசிகலா

சசிகலா

இது அதிமுக மட்டுமின்றி, அமமுக தொண்டர்களையும் தன்பக்கம் இழுத்து வரும் பிளானாகவும் சசிகலா நினைக்கிறார்.. அன்று மெரினாவில் ஜெயலலிதா மேற்கொண்ட உண்ணாவிரதம்தான், மிகப்பெரிய ஆளுமையாக அவரை உயர்த்தி காட்டியது.. அதனால், அதே பாணியை சசிகலாவும் கையில் எடுக்கலாம். இன்னொன்றும் சொல்கிறார்கள், அதிமுக நிர்வாகிகள் ஓரளவு ஆதரவு காட்ட துவங்கிவிட்டதால், அதிமுக மா.செ.க்களை குறி வைத்து தன்னுடைய பிளானை சசிகலா ஆரம்பித்துள்ளார்.. இது இரட்டை தலைமைக்கு மேலும் கிலியை தந்து வருகிறது.

மனுக்கள்

மனுக்கள்

அதேபோல, அதிமுக மேலிடத்தை எடுத்து கொண்டால், வேறு யாருக்கும் வேட்பு மனுக்களை கூட வழங்காமல், அதே தலைமைதான் தங்கள் பதவியை பிடித்து வைத்துள்ளனர்.. அதுவும் அமைதியாக நடந்து முடியாமல், கைகலப்பு, பிரச்சனைகளுக்கு நடுவேதான் ஓபிஎஸ் - எடப்பாடியின் வெற்றி அமைந்துள்ளது.. இப்படி வேட்பு மனுக்களை கூட வேறு யாரையும் வாங்க விடாமல் இவர்கள் நடத்தியது ஜனநாயக தேர்தலா? என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே எழுந்ததை மறுக்க முடியாது.

கட்சி

கட்சி

ஒருகட்டத்தில் சில தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.. "இவங்க 2 பேருமே எங்களுக்கு வேண்டாம்.. இரட்டைத் தலைமை என்பது அதிமுகவுக்கு எந்த காலத்திலம் ஏற்புடையது இல்லை.. தொண்டர்கள்தான் இந்த கட்சியை வளர்த்தோம்.. நாங்களே கட்சியை பார்த்துக்கறோம்.. வாக்காளர் லிஸ்ட்டை கூட வெளியிடாமல் தேர்தலை அவசர அவசரமாக நடத்துவதன் காரணம் என்ன? அன்வர்ராஜாவை ஓவர்நைட்டில் பதவி நீக்கம் என்ன காரணம் என்ன? ஒவ்வொன்றையும் அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறது அதிமுக தலைமை.. இது எங்கே போய் முடியுமோ? என்று அந்த தொண்டர்கள் கவலையாக கேட்கிறார்கள்.

 மா.செ.க்கள்

மா.செ.க்கள்

இன்னொரு பக்கம், தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஓபிஎஸ் - எடப்பாடி இருவருக்குமே அடுத்த சிக்கலை உருவாக்கி உள்ளது.. ஒருங்கிணைப்பாளராக மறுபடியும் பதவிக்கு கைக்கு வந்துவிட்டதால், தனக்கு நெருக்கமானவர்களையே மாவட்ட செயலாளர்களாக்கும் வேலையில் ஈடுபட போகிறாராம் ஓபிஎஸ்.. அதாவது தனக்கு ஆதரவான நிர்வாகிகளின் லிஸ்ட்டை தயார் செய்து, அதில், 50 சதவீத மாவட்ட செயலாளர்களும் தன்னுடைய ஆதரவாளர்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாராம்... இதையேதான் எடப்பாடி பழனிசாமியும் யோசித்து வருகிறார்.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இப்போது இருவருக்குமே சிக்கல் என்னவென்றால், ஆதரவாளர்களுக்கு பதவியை தந்தாலும், எல்லாருக்குமே தந்துவிட முடியாது.. பதவி தர முடியாத சூழலில், அதிருப்திக்கு ஆளானவர்கள் சசிகலா பக்கம் இதை காரணம் காட்டி சென்றுவிட்டால் என்ன செய்வது என்பதுதான் மேலிடத்தின் கவலையாக உருவெடுத்துள்ளது.. அதனால் அதிருப்திகளையும் உருவாகவிடாமல், அனைவரையும் சரிக்கட்டி, மா.செ.க்களை நியமித்து அரவணைத்து செல்லும் மிகப்பெரிய வேலையில் இரட்டை தலைமை ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. ஆக மொத்தம், ஒருபக்கம் சசிகலாவின் 2 பிளான்கள், மறுபக்கம் இரட்டை தலைமைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கலில் அதிமுக திணறி வருவதாகவே தெரிகிறது என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+