அதிமுகவில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்காங்க.. லிஸ்ட் போட்டுத் தூக்க தயாராகும் தினகரன்
திருப்பரங்குன்றம் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது.
Recommended Video
சென்னை: அதிருப்தி, ஏமாற்றம், அப்செட் காரணங்களுக்காக அதிமுக நிர்வாகிகள் அமமுக பக்கம் சாய ஆரம்பித்துள்ளனராம்!
தினகரன் அமமுகவை கட்சி ஆரம்பித்ததில் இருந்தே கொஞ்சம் ஏறுமுகம்தான். அதிமுக, அமமுக பூத் ஏஜெண்ட்கள் பலர் நட்பு காட்டி கொண்டதாக கூறப்பட்டது.
தேர்தல் பிரச்சாரங்களின்போதே சீட் கிடைக்காத காரணங்களினாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலும் ஏமாந்த அதிமுக நிர்வாகிகள் அமமுகவுக்காக சில உள்ளடி வேலைகளில் அமமுகவுக்காக இறங்கியதாக சொல்லப்பட்டது.

முத்துராமலிங்கம்
இந்நிலையில், இப்படி அதிருப்தி தரப்பினரை தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் தினகரன் தரப்பு இறங்கி உள்ளதாம். அதில் ஒருவர்தான் மதுரை முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம். ஜெ. இருந்தபோது மாவட்ட செயலாளராக இருந்தவர்.

விசுவாசம்
ஜெ. மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். எப்படியும் விசுவாசம் காரணமாக ஏதாவது பொறுப்பு, பதவி வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர். இதற்காக ஓபிஎஸ் மகனுக்காக தொகுதியில் வேலைகளை இழுத்து போட்டுகொண்டு செய்தவர்.

புறக்கணிப்பு
ஆனால் திருப்பரங்குன்றத்தில் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதுதான் அவருக்கு பெரிய ஷாக். இந்த கோபத்தில் தேர்தல் பணிகளைகூட புறக்கணித்துவிட்டாராம். ஒரு பக்கம் ஓபிஎஸ் தரப்பு இவரை சமாதானப்படுத்த முயன்றாலும், இவரை தன் பக்கம் இழுக்கவே தினகரன் தரப்பு முயல்கிறாராம்.

அமமுக முயற்சி
முத்துராமலிங்கம் மட்டுமில்லை.. திருப்பரங்குன்றம் போஸ் குடும்பத்தினர் சீட்டு கேட்டு தராததால், அவர்களுக்கும் ஏமாற்றம்தான். இதனால் கடுமையான அப்செட்டில் அந்த குடும்பம் இருப்பதால், அவர்களையும் அமமுக வளைத்துபோட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

அப்செட்
இது வெறும் திருப்பரங்குன்றம் தொகுதி பற்றிய நிலைதான்.. இதுபோலவே மற்ற தொகுதிகளில் எம்பி சீட் கேட்டு அப்செட் ஆனவர்களையும் அணுகி பேசி அழைத்து கொள்ள தினகரன் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications