தமிழகத்தின் பொருளாதாரம் மீள்கிறது.. வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.. முதல்வரின் ஹேப்பி நியூஸ்!
சென்னை: முதியோர், இணைநோய் உள்ளவர்களின் மாதிரிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொது முடக்கம் நீக்கப்படுவது, தளர்வுகள் குறித்து இன்று மாவட்டக் கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. தொழில்களில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா கால கட்டத்திலும் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை தமிழகம் உருவாக்கியுள்ளது. ஊரடங்கால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளை களைவதற்கு 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் கொரோனா தடுப்பு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலுக்கு பரிசோதனை செய்ய முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.
கொரோனா காலத்தில் கூடுதலாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்கள பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்டு வருகிறோம்.
இணைநோய் உள்ளவர்களின் மாதிரிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே அக்கறை எடுத்தக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தனி நபர் வருமானம் உயர்ந்து வருகிறது'' என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications