பச்சை துரோகம் செய்யாதீங்க.. தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? கைக்கூப்பி விஜய் சேதுபதி வீடியோ
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பச்சை துரோகம் செய்யாமல் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கைக்கூப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. இந்த 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கைக்கூப்பி தனது பேச்சை தொடங்கி உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவத: "அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே.. எப்படி இருக்கீங்க.. நாம் எல்லோரும் ஆசையாக எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் வந்துவிட்டது.
வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லோருக்கும் ஒரு மனநிலை இருக்கும். அதாவது யார் வந்தா நமக்கென்ன.. இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்.. இல்லாவிட்டால் ஓட்டு போட்டு ஒன்றும் ஆகப் போறதில்லை போன்ற இத்தகைய மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லாவிட்டாலும் கூட நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசு வாங்கிவிட்டு ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க, புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு.
நாம என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு? இதுக்கு முன்னாடி அவர்கள் என்ன செஞ்சிருக்காங்க? என்ன சொல்றாங்க? என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க.
இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை , இன்றையிலிருந்து தேர்தலில் ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தேர்தல் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுபற்றிய விவாதத்தை வைத்து கொள்ளுங்கள். ஓட்டுப்போடும் தினத்தில் தெளிவா, சிந்தித்து உங்களுக்கு சரின்னு படுறவங்களுக்கு விரலில் மை வைத்து வாக்களியுங்கள்'' என்றார்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications