தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. கள்ளக்குறிச்சி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி
சென்னை: நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக - தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கி உள்ளார். இதில் விருதுநகர் தொகுதி இடம்பெற்றுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையில் பெரிய கூட்டணியை அமைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார்.

இதற்காக அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றனர். அதிமுக சார்பில் பாமக மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாமக நிறுவன தலைவர் ராமதாசுடன், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாமக இணையவில்லை. பாமக-பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இருப்பினும் தேமுதிகவுடன் தொடர்ந்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக - தேமுதிக நிர்வாகிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இருப்பினும் தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 லோக்சபா தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. ஆனால் அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கையெழுத்தானது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், மத்திய சென்னை, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது. இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இவர் இந்த தொகுதியில் போட்டியிட ஏற்கனவே விருப்ப மனு வழங்கி உள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவின் தம்பி சுதீஷ் விருப்பமனு செய்திருந்தார். இதனால் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications