Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பு கணக்கு, பகல் வேஷம்.. திடுதிப்பென வந்த சசிகலா.. திமுக தேர்தல் அறிக்கை மீது கடும் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் களமே பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவை ஒன்றிணைப்பதாக இன்னமும் கூறி வருகிறார் சசிகலா. தேர்தல் களத்தில் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில் இன்று திடீரென திமுகவின் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் சசிகலா.

இது தொடர்பாக சசிகலா கூறியிருப்பதாவது: திமுகவினர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றிடாத நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுகவினர் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர். அவர்களின் பகல்வேஷம் இனியும் தமிழக மக்களிடம் எடுபடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைவது உறுதி.

Lok Sabha Election 2024 Sasikala Slams DMK s Promises in Manifesto

நீட் தேர்வு: திமுகவினர் ஒரே பொய்யை எத்தனை முறை சொல்வது என்ற கணக்கு கூட தெரியாமல், நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என்று மீண்டும் அறிவித்திருப்பதன் மூலம் திமுகவினரின் பகல் வேஷம் கலைந்துவிட்டது

சாத்தியமே இல்லை: மேலும், நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளும் மூடப்படும் என்று நடைமுறையில் சாத்தியப்படாததையெல்லாம் சொல்லியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சுங்க சாவடிகளை மூடிவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளை யார் பராமரிப்பது?

3 ஆண்டுகால ஆட்சி: விவசாயிகளின் நலன் மற்றும் மக்களின் நலன் என்று திட்டங்களை பட்டியலிடும் திமுகவினர் அவர்களுக்கு எதையும் செய்வதில்லை. திமுகவினரின் இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் தமிழக மக்களை கசக்கி பிழிந்ததுதான் மிச்சம்.

சேது சமுத்திர திட்டம்: மேலும், சேது சமுத்திர திட்டம் என்ற ஒரு திட்டத்தை தூக்கி பிடித்து அதற்கு 2,427 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த திட்டம் கடலில் கரைந்த பெருங்காயம் போல ஆனது. இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் இது செயல்முறை படுத்தப்பட்டு, மக்களின் பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது. அதன்பிறகு கைவிடப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்போவதாக திமுகவினர் தற்போது தங்களது தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

Lok Sabha Election 2024 Sasikala Slams DMK s Promises in Manifesto

போலி பேச்சு எடுபடாது: எனவே, திமுகவினரும் அவர்களது கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும், மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள், இனி அவர்களிடம் உங்களின் போலியான பேச்சுக்கள் எடுபடாது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

பிரதமர் வேட்பாளர் யாராம்?: மேலும் திமுகவினர் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளரே யார் என்று தெரியாதபோது, தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை செயல் படுத்தப்போவதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவினரின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எல்லாம் அடுத்து வரப்போகும் இந்திய பிரதமர் நிறைவேற்றுவாரா என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்த கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்.

எத்தனை காலம் ஏமாற்றுவார்?: தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற 38 நாடாளுமன்ற உறுப்பினர்களால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். திமுகவினர் ஒவ்வொரு நாளும் மத்திய அரசோடு சண்டையிட்டு கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்ததுதான் மிச்சம். தற்போது நடப்பதையொல்லாம் பார்க்கும்போது *"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"* என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+