ராஜ்பவனை விட்டு மீண்டும் கமலாலயம் வந்துள்ளேன்.. பாஜகவில் இணைந்த தமிழிசை செளந்தரராஜன் மகிழ்ச்சி
சென்னை: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ராஜ்பவனை விட்டு விட்டு மீண்டும் கமலாலயத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன். அதிகாரத்தை விட்டு விட்டு மக்கள் பணியாற்றுவதற்காக மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, புதுச்சேரியில் ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாநிலத்தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழிசை செளந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார் அண்ணாமலை. மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய பழைய உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் பணியாற்றுவதற்காகவே அதிகார பதவியை விட்டு விட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். ராஜ்பவனை விட்டு விட்டு கமலாலயம் வந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.

ஆளுநர் பதவி ராஜினாமா என்னும் கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக











Click it and Unblock the Notifications