சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல் 2019… கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இது தவிர ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக, வருகிற 18 ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

Lok Sabha elections 2019: Election Commission prohibits Opinion Poll

"ஆக" போடாம ஒரு வார்த்தை பேச சொல்லுங்க பார்ப்போம்.. ஸ்டாலினை கலாய்த்த சீமான்

இந்தநிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்தத் தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி, இன்று காலை 7 மணியிலிருந்து மே 19 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது போன்றவை தடை செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறுத்தப்பட்டு வாக்குப் பதிவு முடிவடைவதற்காக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட 48 மணிநேர கால அளவில் ஏதேனும் கருத்து கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்த ஒரு தேர்தல் விவகாரங்களையும் எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

English summary
The Election Commission of India has banned the Opinion Poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X