பாஜகவிற்கு டாட்டா.. லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட விரும்பும் அதிமுக?.. 4 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தனித்து போட்டியிட அதிமுகவிற்கு 4 கரணங்கள்

    சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். 4 முக்கிய காரணங்களால் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது பல நாட்களுக்கு முன்பே உறுதியாகிவிட்டது. இன்னும் தொகுதி பங்கீடு மட்டுமே மீதம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக என்ன மாதிரியான கூட்டணியை அமைக்கும் என்று இன்னும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    அதிமுக தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறி வருகிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தையும் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் பாஜகவுடன் அதிமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுக்கு கூட இவர்கள் இன்னும் சந்தித்து ஆலோசிக்கவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பாஜக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருக்கிறது. அதிமுக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு 4 முக்கிய காரணங்கள் உள்ளது.

     நல்ல பெயர் எடுக்க

    நல்ல பெயர் எடுக்க

    பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய அளவில் நல்ல பெயர் இல்லை. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழகத்தில் அதிமுக பெரிய அளவில் தலைமை இல்லாமல் தவிக்கிறது. அதேபோல் அதிமுகவின் பெயரும் நாளுக்கு நாள் தமிழகத்தில் மோசம் அடைந்து கொண்டு செல்கிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நற்பெயர் எடுக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று அதிமுக முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

    பாஜக அச்சம்

    பாஜக அச்சம்

    அதேபோல் பாஜகவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அச்சப்படுவதாக கூறுகிறார்கள். அதிமுகவுடன் சேர்ந்தால் கிடைக்கிற வாக்கும் கிடைக்காமல் போய்விடும் என்று பாஜகவிற்கு கூறப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாஜகவிற்கு இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று இரண்டு இடங்களை பெறுவதாவது முக்கியம், அதிமுகவுடன் சேர்ந்தால் அது கஷ்டம் என்று பாஜகவிற்ககு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    மேலும் பாஜக இந்த தேர்தலில் அதிக தொகுதியில் நிற்க திட்டமிடுவதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் 40ல் 15 தொகுதி வரை அதிமுக கட்சியிடம் பாஜக கேட்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். தமிழகத்தில் அதிக இடங்களை பெற்றால் ஓரளவு அதிக இடங்களை மொத்தமாக லோக்சபாவில் பெறமுடியும் என்று பாஜக நம்புகிறது. ஆனால் அதிமுக 30க்கும் குறைவான இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காது என்கிறார்கள்.

    தினகரன் பக்கம் வாய்ப்பு

    தினகரன் பக்கம் வாய்ப்பு

    இது இல்லாமல் அதிமுகவுடன் எப்போது வேண்டுமானாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சேர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முக்கியமாக 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு பின் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் டிடிவி தினகரனுக்கு வழிவிட்டு பாஜகவுடன் அதிமுக தனது நட்பை முறித்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+