சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதுவும் பேச மாட்டார்.. விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டார்.. தேமுதிக சுதீஷ் பகீர் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசமாட்டார்- சுதீஷ் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசமாட்டார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு இடங்களை பெற்று உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நான்கு வேட்பாளர்களை தேமுதிக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி அளித்துள்ளார்.

    கமல்ஹாசனின் சம்மட்டி அடி கேள்விகள்.. கமல்ஹாசனின் சம்மட்டி அடி கேள்விகள்.. "அம்மா"வின் அரசு என்ன செய்ய போகிறது

    அதிமுக இடங்கள்

    அதிமுக இடங்கள்

    தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தனது பேட்டியில், அதிமுகவிடம் நாங்கள் இந்த கூட்டணியில் 8 இடங்களும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது நாங்கள் கேட்கும் 4 தொகுதியை கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் கேட்கும் தொகுதி எங்களுக்கு கிடைத்து இருக்கிறது.

    பாஜக கோரிக்கை

    பாஜக கோரிக்கை

    பாஜகவிடம் நாங்கள் சில கோரிக்கைகள் வைத்து இருக்கிறோம். பாஜக ஆட்சி அமைத்த பின் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம். சில முக்கிய கோரிக்கைகளுடன்தான் இந்த கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

    பாமக என்ன

    பாமக என்ன

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் விஜயகாந்தை சந்தித்தனர். இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் இதனால் தேர்தலில் இணைந்து பணியாற்ற முடியும். இது எங்களுக்கு பலம் அளிக்கும்.

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். கூட்டணி குறித்தெல்லாம் அவர்கள் அப்படி பேசி இருக்க கூடாது. அவர்கள்தான் எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக பேசினார்கள். ஆனால் இப்போதும் துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாற்றம் அடையாது.

    எதுவும் பேச மாட்டார்

    எதுவும் பேச மாட்டார்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார கூட்டங்களுக்கு வருவார். சுற்றுப்பயணங்கள் சிலவற்றில் கலந்து கொள்வார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேச மாட்டார். பிரச்சார கூட்டங்களில் அவர் எதுவும் பேச மாட்டார். தேமுதிகவின் மற்ற தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள் என்று சுதீஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Lok Sabha Elections 2019: DMDK chief Vijayakanth won't talk in election campaign says DMDK Sutheesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X