வஞ்சிரத்தை விடுங்க.. ரேட் எகிறிய வவ்வால்! காசிமேடு சந்தையில் மீன் வரத்து குறைவால் மக்கள் ஏமாற்றம்
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் குவியும். ஆனால் இந்த முறை போதிய அளவில் மீன் வரத்து இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் என்பது எழுதப்படாத விதி. சென்னைவாசி எனில், நல்ல பிரஷ் மீன் வேண்டும் என்றால் காசிமேடுதான் போக வேண்டும். எனவே எல்லா ஞாயிறுகளும் காசிமேட்டில் திருவிழா போலத்தான் இருக்கும். ஆனால் இந்த முறை வழக்கத்தை விட மீன் வரத்து குறைவாகவே இருந்திருக்கிறது.

வடசென்னையின் காசிமேட்டில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் வங்க கடலுக்குச் சென்று மீன் பிடிப்பது வழக்கம். இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் உயர் ரகமான மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற மீன்கள் உள்ளூர் சந்தையில் மக்களுக்கு விற்கப்படுகிறது. வழக்கமாக சந்தையில் வஞ்சரம், கருப்பு வெள்ளை வவ்வால்கள், பாறை மீன், இறால், நண்டு, திருக்கை மீன், சுறா, மத்தி, கிழங்கா, கொடுவா, சூறை, சங்கரா, கானாங்கத்தை, நவரை, கனவா உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கிடைக்கும்.
இதில் சங்கரா, நவரை, நெத்திலி, கானாங்கத்தை உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் மக்களால் அதிக அளவில் விரும்பப்பட்டு வாங்கப்பட்டு வருகிறது. காசுள்ள நபர்கள் வஞ்சிரம், வவ்வால், பாறை, சூறை மீன்களை வாங்கி செல்வார்கள்.
ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமையில் மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். குறிப்பாக சங்கரா மீன்களை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. அதேபோல கானாங்கத்தை, நவரை மீன்களின் வரத்தும் குறைவாக இருந்ததால் சீக்கிரமாகவே அது விற்கப்பட்டு விட்டது. தவிர வஞ்சரம், வவ்வால், சுறா, பாறை உள்ளிட்ட மீன்கள் பரவலாக காணப்பட்டது.
ஆனால் இன்று வஞ்சரத்தை விட வவ்வால் அதிக விலைக்கு விற்பனையாகி இருந்தது. தோராயமாக இரண்டு கிலோ அளவுள்ள வஞ்சிரம் மீன் ரூபாய் 800ல் இருந்து 1100 வரை விற்கப்பட்டது. ஆனால் இதே எடை கொண்ட பெரிய கருப்பு வவ்வால் மீன் 1300 முதல் 1500 வரை விற்கப்பட்டது. வழக்கமாக வஞ்சிரம் மீனுக்கு மட்டுமே டிமாண்ட் அதிகமாக இருக்கும். பாறை வவ்வால் மீன்கள் சாதாரணமாகவே அதிகமாக கிடைக்கும் என்பதால் அதற்கான விலை வஞ்சிரத்துக்கு அடுத்தபடியாக இருக்கும்.
ஆனால் இந்த முறை பாறை மற்றும் வவ்வால் மீன்களின் குறிப்பாக கருப்பு வவ்வால் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்திருக்கிறது. 100 கடைகள் இருக்கிறது எனில் அதில் 5 லிருந்து 10 கடைகளில் மட்டுமே கருப்பு வவ்வால் மீன்களை பார்க்க முடிந்தது. அதிலும் விலை கூடுதலாக இருப்பதால் மக்கள் அதை வாங்க பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை.
கருப்பு வவ்வால் வரத்து குறைவு மற்றும் விலை அதிகம் என்பதால் பலரும் வஞ்சரம் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி இருக்கின்றனர். வஞ்சிரத்துக்கு திடீர் திமாண்ட் ஏறியதால் ஸ்டாக் வைக்கப்பட்ட வஞ்சரம் மீன்களை மீனவர்கள் விற்றுத் தள்ளி இருக்கின்றனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications