வங்கக்கடலில் நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெறுவது எப்போது? மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடலில் நாளை காலைக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலம் துவங்கிவிட்டது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கத்தரி வெயிலின் பிடியில் இருந்து தப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தென்கிழக்கு வங்ககடலில் வளிமண்ட கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இது தொடர்ந்து நாளைக்குள் அதேபகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து புயலாகவும் வலுப்பெற உள்ளது. தற்போதைய இந்த வானிலை மாற்றம் காரணமாக இன்றும், ,நாளையும் தமிழகம் மற்றும் பிறபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் பட்சத்தில் அதற்கு மோக்கா என பெயரிடப்பட உள்ளது. அநேகமாக இந்த புயல் மே 7 மற்றும் மே 9 ஆம் தேதி இடையில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புயல் நாட்டின் கிழக்கு கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புயல் சின்னம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களையும் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*****
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications