Asani: வங்கக் கடலில் உருவானது அசானி புயல்.. தமிழகம், புதுவைக்கு இடி மின்னலுடன் கூடிய மழை!
சென்னை: வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அசானி புயலாக வலுப்பெற்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை வானிலை ஆய்வு மைய இன்று வெளியிட்ட செய்திக்குறிப்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது 8-ம் தேதி (இன்று) காலை புயலாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகர்ந்து 10-ம் தேதி மாலை வட ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும்.
அதன் பிறகு வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன்காரணமாக, தென்கிழக்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மெல்ல கற்றின் வேகம் அதிகரித்து இன்று மாலை 110 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

ஆகவே மீனவர்கள் வங்கக்கடலில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. மழைப்பொழிவை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஆங்காங்கே இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் வடக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications