குவைத்தின் தீ விபத்தில் மனிதச் சதைகள் கருகிய வாசம் உலகக் காற்றில் வீசுகிறது.. வைரமுத்து உருக்கம்
சென்னை: குவைத் தீ விபத்தில் மனிதச் சதைகள் கருகிய வாசம் உலகக் காற்றில் வீசுகிறது என கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மங்கப் நகரில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியிருந்த 6 மாடிக் கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இத்தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 50-க்கும் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ2 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் விரைந்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலைமை குறித்து அறிய தமிழ்நாடு அரசும் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியம், குவைத் தீ விபத்தில் சிக்கியோர் குறித்த விவரங்களைக் கேட்டு வருகிறது.
குவைத் தீ விபத்து சம்பவத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குவைத் தீ விபத்து சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட உருக்கமான இரங்கல்:
குவைத்தின் தீ விபத்தில்
மனிதச் சதைகள்
கருகிய வாசம்
உலகக் காற்றில் வீசுகிறது
இறந்த பின்தான்
தகனம் செய்வார்கள்;
தகனம் செய்து
இறப்பைத் தந்திருக்கிறது
நெருப்பு
இதயத்தின்
மெல்லிய தசைகள்
மெழுகாய் உருகுகின்றன
உலகம்
தோன்றிய நாளிலிருந்து
விபத்துகள் புதியனவல்ல
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்
அது தொடர்வது
பாதுகாப்பு அளவீடுகளின்
குறைபாடுகளைக் காட்டுகிறது
மனிதத் தவறுகள்
திருந்தவில்லை என்று
வருந்திச் சொல்கிறது
மாண்டவர்களுக்காக
அழுது முடித்த இடத்தில்
அழத் தேவையில்லாத சமூகத்தை
வார்த்தெடுக்க வழி சமைப்போம்
உலகத் தொழிலாளர்களுக்கு
என் இந்தியக் கண்ணீர்
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து தமது இரங்கல் கவிதையில் தெரிவித்துள்ளார்.

-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications