ஸ்டாலினுக்கு ஆட்சி பற்றி ஒன்றும் தெரியாது.. அவர் குறுகிய எண்ணம் படைத்தவர்.. முதல்வர் கடும் விமர்சனம்
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் குறித்து ஒன்றும் தெரியாது, அவர் குறுகிய மனம் படைத்தவர் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் குறித்து ஒன்றும் தெரியாது, அவர் குறுகிய மனம் படைத்தவர் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரின் இந்த பயணம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி நிறைவு அடைந்தது.
இந்த நிலையில் தமிழகம் திரும்பி உள்ள அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். திமுக கட்சியின் புகார்கள் குறித்தும், தன்னுடைய வெளிநாட்டு பயணம் குறித்தும் அவர் பேட்டி அளித்தார்.

என்ன சொன்னார்
தமிழகத்தின் நிலைமை குறித்து பேசி தெளிவுப்படுத்தவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு முதல்வராக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதில் எந்த தவறும் கிடையாது. தமிழகத்தில் புதிதாக 29 தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலர் பயன் அடைய போகிறார்கள்.

ஆதரவு
மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம். தமிழகத்திற்கு புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் அனைத்தையும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.

எப்படி
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் விபத்தை கட்டுப்படுத்த முடியும். உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

திமுக எப்படி
தமிழக எதிர்கட்சித் தலைவர் குறுகிய எண்ணம் படைத்தவர். அரசை பாராட்டும் எண்ணம் அவருக்கு கிடையாது. அவர் யாரையும் பாராட்ட கூடிய நபர் கிடையாது. எங்களை அவர் திட்டாமல் இருந்தாலே பெரிய பாராட்டுதான். நாட்டை பற்றி கவலைப்படாத கட்சி திமுக.

ஸ்டாலின் எப்படி
அரசு எப்படி செயல்படுகிறது என்பது ஸ்டாலினுக்கு தெரியாது அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை.யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை.கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அணைகள்
1,869 ஏரிகளை பராமரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?.அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை.கேரள முதலமைச்சரை சந்திக்கும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளோம்.

கோவை எப்படி
கோவையில் பல இடங்களில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம், என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications