ஜப்பானின் “ஹிட்டாச்சி”.. செம “ஹிட்” ஆச்சு - 2500 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் மையத்தை திறந்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜப்பானை சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைத்துள்ள தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதுலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5:10.2373) சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவணமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார்.

M.K.Stalin inaugurated the innovation center set up in Chennai by Hitachi

தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், பெருவாரியான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வணிக நடைமுறைச் சட்டம் விதிகளில் / பெருமளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில், 14-ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3-ஆம் இடத்தை பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில துறையை மட்டும் சார்ந்து இல்லாமல் பங்வேறு துறைகள் குறிப்பாக வளர்ந்துவரும் துறையைான மின் வாகனங்கள், மின்கலன்கள், பசுமை எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்கு துறை வாரியாக கொள்கைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட தொழில் பூங்காக்களையும் அமைத்து வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைத்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைர்சர் திருமு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை. 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்த கட்டமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் சிறப்பான முறையில் நடத்தி பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வரித்தகத்துறை மேற்கொண்டு வருகின்றது.

ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட்: ஐப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகெங்கிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய ஃபார்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம் சுவிட்சர்லாந்தினை தனது தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் முன்னதாக பிப்ரவரி 2023ல், தனது எரிசக்தி திட்டத்தினை சென்னையில் தொடங்கியுள்ளது.

தற்போது, இந்த நிறுவனம் சென்னை போரூரில் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தில், சுமார் 50,000 சதுர அடியில் ஒரு பிரத்யேக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எரிசக்தித் துறையில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 2500 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை இன்று திறந்து வைத்தார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கணவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு அந்நிறுவனத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. உலகளவில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க இவை பெரிதும் உதவும்." என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+