எம்.எஸ். Barbie Doll ஆ? அசிங்கப்படுத்திய கிருஷ்ணாவுக்கு விருதா? பரிசை பார்சல் அனுப்பும் பாலகாட் வாரிசு
சென்னை: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை Barbie Doll என்று விமர்சித்த டி.எம்.கிருஷ்ணா இப்போது அவரது பெயரில் கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் விருதை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளது ஏன் என்று கர்நாடக இசைக் கலைஞர் பாலகாட் ராம்பிசாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை மியூசிக் அகாதெமி வரும் மார்ச் மாதம் டிஎம் கிருஷ்ணாவுக்கு 'சங்கீத கலாநிதி' விருதை அளிக்க இருக்கிறது என்று செய்தி வெளியானது முதல் கர்நாடக சங்கீத உலகம் களேபரமாகி வருகிறது. இந்த 'சங்கீத கலாநிதி' விருது என்பது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பெயரில் வழங்கப்பட்டு வரும் விருதாகும். அவரை விமர்சித்த ஒருவருக்கு எப்படி இந்த விருதைக் கொடுக்க முடியும் என்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரனான வி.சீனிவாசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

மேலும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி கடைசியாக எழுதி வைத்துள்ள உயிலில், தனது பெயரில் யாருக்கும் விருது அளிக்கக்கூடாது என்று எழுதி இருப்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாலகாட் ஆர். ராம்பிரசாத், தனது தாத்தாவுக்குக் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட இந்த விருதைத் திரும்பி அனுப்ப உள்ளதாக சங்கீத அகாதெமிக்கு கடிதம் எழுதி தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை பதியவைத்துள்ளார். அவர் கிருஷ்ணாவுக்கு விருது அளிக்கும் சர்ச்சை பற்றி ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், "நான் கடிதம் எழுதவில்லை. என் பெரியப்பாதான் கடிதம் எழுதினார். முன்னோடி ஒருவரைக் கிருஷ்ணா இழிவு செய்துள்ளார். அவரை விருதுக்குத் தேர்வு செய்திருக்கிறீர்களே? என்று விளக்கம் கேட்டார். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கும் செய்திக் குறிப்பில், 'பாரம்பரியத்தைக் காப்பாற்றுவர்' என்ற சொல் இருந்தது. கிருஷ்ணா 'பாரம்பரியத்தை உடைப்பதுதான் தன் வேலை' எனச் சொல்லி வருகிறார். அதைக் கேட்டதும் சங்கீத பங்களிப்புக்குத்தான் இந்த விருது என்றது அகாதெமி. அப்படி எனில் முன்பு வெளியான அறிக்கையில் சமூக சீர்திருத்தத்திற்காக இந்த விருது எனக் குறிப்பிட்டது ஏன்?
இதில் கேலி என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளாகச் சங்கீத சபாவில் கிருஷ்ணா பாடாமல் இருக்கிறார். அவரை பாடக்கூடாது எனச் சொல்லி தடுத்தவர்கள் யார்? ஏன் அவர் சபாவில் பங்கேற்காமலிருந்தார்? அதற்குப் பதில் என்ன? சபா பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று கிருஷ்ணா சொன்னார். அப்படி எனில் இப்போது நிலைமை மாறிவிட்டதா? அதற்கு கிருஷ்ணாவிடம் விளக்கம் உள்ளதா?

விருது தருகிறோம் என்றதும் உடனே வாங்கிக் கொள்கிறார். அப்படி என்றால் அவர் கொள்கை என்னவானது? மக்கள் கேட்பார்களா இல்லையா? இப்போது சங்கீத சபா அதே மைலாப்பூரில் தானே இருக்கிறது. அவர் சொன்ன மாமா, மாமி சபாவில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது? அதை விளக்கிவிட்டு அவர் விருதைப் பெறவேண்டும்" என்கிறார்
தொடர்ந்து பேசிய ராம்பிரசாத், "கர்நாடக இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அதில் ஏன் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சிறப்பானவர்? ஏனென்றால் அவர்தான் இசை மூலம் பக்தியை பாமர மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தவர். காலை எழுந்தவுடன் திருப்பதியில் எம்.எஸ். பாட்டுதான் இன்றும் ஒலித்துக் கொண்டுள்ளது. திருப்பதி மலை மீது அவரது சிலையே இருக்கிறது.
சென்னை மியூசிக் அகாதெமி எம்.எஸ்.க்கு இந்த விருதைக் கொடுக்கும்போது அதற்கு ஒரு பெருமை வந்துசேர்ந்தது. பாலகாட் மணி அய்யருக்கும் தந்தபோது அந்த விருதுக்குப் பெருமை சேர்ந்தது. எங்கள் தாத்தா பத்மஸ்ரீ அவார்ட் கொடுத்த போது அதை நேரில் போய் வாங்கிக் கொள்ளவில்லை. போஸ்ட் மேன் தான் கொண்டுவந்து கொடுத்தார்.
உயர்நீதிமன்றத்தில் இப்போது போடப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள விவகாரங்களை முழுக்க நானும் படித்தேன். 20 பக்கத்திற்கு விளக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எம்.எஸ் பற்றி என்னென்ன விமர்சனங்களைக் கிருஷ்ணா பேசி இருக்கிறார் என்பதை தேதி வாரியாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
மேலும் 20 நூற்றாண்டின் ஏமாற்றுப் பேர்வழி என சுப்புலக்ஷ்மியை கிருஷ்ணா பேசி இருந்தது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். பெரிய திசை திருப்பல்காரர் என்றும் கூறியுள்ளார். Barbie Doll என்று சுப்புலக்ஷ்மியை விமர்சித்திருக்கிறார். மேலும் அவரது தோல் நிறம் சிவப்பாக இல்லாமல் கருப்பாக இருந்திருந்தால் இப்படிக் கொண்டாடி இருப்பார்களா என்று கேட்டிருக்கிறார். எவ்வளவு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு தூரம் விமர்சித்திருக்கிறார் கிருஷ்ணா.
இப்படி எல்லாம் எம்.எஸ் பற்றிப் பேசிவிட்டு இப்போது அவரது பெயரில் தரும் விருதை மட்டும் கிருஷ்ணா வாங்கிக் கொள்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. சமூகத்தில் உயர்வாக உள்ள ஒருவரை மிகக் கேவலமாகப் பேசிவிட்டு எப்படி இவரால் அவர் பெயரில் தரப்படும் விருதைப் பெற்றுக் கொள்ள மனம் வருகிறது? நீங்கள் பிரபலமடைவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? தனது உறவினரை மிக இழிவாக பேசினாருக்கு ஏன் அந்த விருதைக் கொடுக்கிறீர்கள் எனக் கேட்கும் உரிமை எம்.எஸ். குடும்பத்தினருக்கு இருக்கிறது இல்லையா? அது நியாயம் தானே? அதான் சீனிவாசன் நீதிமன்றம் வரை போய் இருக்கிறார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications