மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் திடீர் திருப்பம்! பதிவுகளை நீக்க ஒப்புக் கொண்ட ஜாய் கிரிஸில்டா!
சென்னை: மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன் என ஜாய் கிரிசில்டா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட கருத்துகளை நீக்குவதாக உறுதியளித்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டது.

கேட்டரிங் சேவை மூலம் புகழ்பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ்' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறி, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த தனிப்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், ஜாய் கிரிசில்டாவின் புகார்களாலும், சமூக வலைதளப் பதிவுகளாலும் ரங்கராஜின் தந்தைக்குச் சொந்தமான மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கிரிசில்டாவின் பதிவுகளால் சுமார் ரூ.12 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியிட கிரிசில்டாவுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார். கிரிசில்டாவின் சமூக வலைதளப் பதிவுகளால் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் வரை ரூ.11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சார்பில் வாதாடப்பட்டது. அத்தகைய பதிவுகளை நீக்கவும், நிறுவனத்தை இணைத்து கருத்துகள் வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரங்களில் தேவையில்லாமல் நிறுவனத்தின் பெயரை இணைத்ததால், பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் பாகசாலா நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட அனைத்து கருத்துக்களையும் நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா உறுதியளித்ததை அடுத்து வழக்கை முடித்து வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications