உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. நடந்த விபரீதம்.. சிக்கிய லாரி டிரைவர்.. பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால் பண்ணை அருகே திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசமாக இருந்தபோது கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் டிரைவர்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவில் வசித்து வந்தவர் சரவணன் என்ற சனா(வயது 29). இவர் திருநங்கை ஆவார்.
கடந்த பிப்ரவரி 22ம் ததி காலை மணலி-மாதவரம் நெடுஞ்சாலையில் மாத்தூர் 200 அடி சாலை அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தின் பின்புறம் திருநங்கை சனா, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

திருநங்கை உடல்
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொலையான திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரித்து வந்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

சிக்கிய டிரைவர்
இந்த நிலையில் திருநங்கை சனாவை கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு கொலையாளி யார் என்பது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தம் அடுத்த மகாத்மா காந்தி நகரை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன்(48) என்பவர் தான் திருநங்கை சனாவை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

உல்லாசத்துக்கு அழைப்பு
டிரைவர் கணேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திருநங்கை சனாவை கொலை செய்தது ஏன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். டிரைவர் கணேசன் ராமநாதபுரத்தில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு திருவொற்றியூர் வந்திருக்கிறார். அப்போது அவருக்கு பசி எடுத்ததாம். இதனால் மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை சனா, அவரை உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தாராம்.

சிறையில் அடைப்பு
அதற்கு ரூ.500 தரும்படி கேட்டாராம். பின்னர் இருவரும் ஜாலியாக இருந்துள்ளார்களாம். அப்போது திருநங்கை சனா, உல்லாசமாக இருந்ததற்கு ரூ.5 ஆயிரம் தரும்படி கேட்டு தகராறு செய்தாராம். இதனால் கணேசன் அவரை அடித்து தாக்கியிருக்கிறார். உடனே அவர், கணேசனை கேவலப்படுத்துகிறேன் என்று கூறி செல்போனில் மற்ற திருநங்கைகளையும் அழைக்க முயன்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், சனாவை கீழே தள்ளி அடித்து உதைத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டாராம். கணேசன் கொடுத்த இந்த வாக்குமூலத்திற்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications