மதன்பாபுவின் உயிரை பறித்த புற்றுநோய்.. மக்களை சிரிக்க வைத்த நடிகரின் கடைசி நாட்களில் நடந்த சோகம்
சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மதன் பாப் என்ற மதன் பாபு இன்று காலமானார். அவரது உயிரை புற்றுநோய் இன்று பறித்துள்ளது. இதனை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மதன் பாப் என்ற மதன் பாபு. 100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்பிபிஎஸ்,விஜயின் பரண்ட்ஸ், நடிகர் அஜித் குமாரின் வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார். இந்த சிரிப்புக்காகவே அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அசத்த போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.
இந்நிலையில் தான் மதன் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று மாலை 5 மணிக்கு காலமானார். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
மதன் பாபு புற்றுநோய் பாதித்து இறந்துள்ளாராம். சமீபத்தில் மதன் பாபுவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இன்று அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. இதனை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் மதன் பாபுவுக்கு சின்னத்திரையில் சமீபத்தில் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் உடல்நலனை காரணம் காட்டி அவர் நடிக்கவில்லை என்று அவரது நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மதன் பாபுவின் உடல் தற்போது சென்னை அடையாறு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்பிறகு நாளை மதன் பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நாளை பிற்பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மதன் பாபுவின் மனைவி பெயர் சுசிலா. இவர் பாடகி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications