நடிகர் விஜய்க்கு கொடுத்த அரசியல் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்.. பகீர் முடிவை அறிவித்தது யார்னு பாருங்க
சென்னை: நான் ரெடி பாடலில் இந்த வார்த்தைகள் எல்லாம் இடம் பெற்றதால் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வரும் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போதே அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

இந்த நிலையில் தற்போது 234 தொகுதிகளை உள்ளடக்கி அவர் சில விஷயங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்றைய தினம் 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவை அளிக்குமாறு விஜய் அவருடைய மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்களும் ஏழைகளின் ஒரு வேளை பசியை ஆற்றினர்.
பொது தேர்வு எழுதிய 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை விஜய் கடந்த 17ஆம் தேதி வழங்கினார். அந்த விழாவில் அவர் பேசுகையில் நாளைய வாக்காளர்களே, நீங்கள் அடுத்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்களாக இருப்பீர்கள். பணத்துக்காக வாக்களிக்க வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்துங்கள்.
நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள். நீங்கள் வாக்களிக்கும் போது நல்ல புதிய தலைவர்கள் வர வாய்ப்பிருக்கிறது என்றார். இதனால் நேரடியாக சொல்லாவிட்டாலும் அவர் அரசியலுக்கு வருவது மேலோட்டமாக தெரிகிறது. இந்த நிலையில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த வகையில் விஜய்க்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
அந்த வகையில் அந்த சங்கத்தின் செல்லபாண்டியன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் லியோ படத்தில் நான் ரெடி பாடல் வெளியானது. இந்த பாடலில் அரசியல் வரிகள் இடம் பெற்றிருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் அதில் கஞ்சா, சிகரெட், மதுபோன்ற வார்த்தைகள் இருப்பதால் பலர் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியான ஆதரவு தந்ததை வாபஸ் பெறுகிறது சங்கம். தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்றும் செல்லபாண்டியன் அனுப்பிய வாழ்த்து செய்தியில் , பிறந்தநாள் விழா காணும் தங்கச்சிமடம் தந்த தந்தை சந்திரசேகரின் தவப்புதல்வனே ஒரு குடிபோதை மறுவாழ்வு மையம் மட்டும் தந்திடு . கோட்டையில் 2026 இல் நீ கொடியேற்றுவதை எந்த கொம்னும் தடுக்க முடியாது, முடியாது என தெரிவித்துள்ளார். அடுத்த நாள் ஜூன் 22 ஆம் தேதி லியோ பட பாடல் வெளியான நிலையில் ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டது மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் நிலைப்பாடு.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications