ப்ளீஸ்.. மதுவந்தி கெஞ்சிய வீடியோ.. ட்ரோல் செய்வதை நிறுத்துங்க, அநாகரீகம்.. டாக்டர் ஷாலினி ஆவேசம்
மதுவந்தி வீடியோ குறித்து டாக்டர் ஷாலினி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: தன் சொந்த சித்தப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூட உதவிக்கேட்க மாட்டாமல், தனியாக கைக்கூப்பி நிற்கும் ஒரு பெண்ணின் துயரை பரிகாசம் செய்வதா தமிழ் பண்பு? முதலில் மதுவந்தியை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள் என்று மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
பாஜக ஆதரவாளர் மதுவந்தி, கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாகவே மதுவந்தி வசித்து வருகிறார்..
இந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்... ஆனால், வீட்டை வாங்கிய பிறகு, அடுத்தடுத்து சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டி வந்தபிறகு ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார்.

கோர்ட் உத்தரவு
இதனால், உரிய வட்டி பணத்தை கட்டுமாறு, பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாகவே மதுவந்தியிடம் எடுத்து சொல்லியும் அவர் கேளாததால், ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. அதற்கும் பதில் ஏதும் இல்லை என்பதால், சென்னை அல்லிகுளம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இறுதியில், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து கோர்ட் உத்தரவிட்டது.

நிறுவனம்
அதன்படியே, மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு, அந்த வீட்டு சாவியும், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது... இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அடுத்த சில மணி நேரத்தில், வீட்டை சீல் வைக்க வந்தவர்களிடம் மதுவந்தி கெஞ்சி கேட்கும் வீடியோ வெளியானது..

வைரல் வீடியோ
அந்த வீடியோவில் மதுவந்தி, "ஸார் ப்ளீஸ்.. லாக் போடாதீங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்.. எனக்கு இது ரொம்ப அசிங்கமா போயிடும்.. ஐ வில் சார்ட் அவுட்.. தயவுசெய்து நான் சொல்றது கேளுங்க" என்று இரு கைகளையும் நீட்டி கெஞ்சினார்.. அங்கிருந்த ஒருவரது பெயரை சொல்லியும், நீங்களாவது சொல்லுங்க சார், பார்த்துட்டே இருக்கீங்களே என்று கேட்டு கொண்டே நின்றார்.. அதிகாரிகள் மதுவந்தியிடம் விளக்கம் சொன்னாலும், அதை அவர் பொருட்படுத்தாமல் மன்றாடி கொண்டே இருந்தார்.

வீடியோ
இந்த வீடியோதான் இணையத்தில் வைரலானது. இதையடுத்து பல்வேறு விமர்சனங்களும், கமெண்ட்களும் எழுந்தன.. சிலர் இதை கிண்டல் கேலியும் செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.. இந்நிலையில், மனநல மருத்துவர் ஷாலினி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதில், மதுவந்தியை விமர்சனம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிப்பெண்
இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: "திருமதி மதுவந்தி ஒரு தனிப்பெண்... ஒற்றை பெற்றோர்... இதற்கு முன் அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தற்பெருமை பேசியது, சவடால் அடித்தது, அலப்பறை செய்தது என்பன எல்லாமும் நமக்கு கடுப்பேற்றினாலும், அவை எல்லாமே முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே.

ரஜினிகாந்த்
இப்போது அவருக்கு ஓர் இன்னல், பணக்கஷ்டம் என்றதும், இது தான் சமயம் என்று அவரை பரிகாசமாய் ட்ரோல் செய்வது அநாகரீகம். இது முற்றிலும் மனிதாபிமானம் அற்றது. அவருக்கும் அவர் வங்கிக்காரர்களுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எப்படி வெளியே கசிந்தது? தன் சொந்த சித்தப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூட உதவிக்கேட்க மாட்டாமல், தனியாக கைக்கூப்பி நிற்கும் ஒரு பெண்ணின் துயரை பரிகாசம் செய்வதா தமிழ் பண்பு?அவரை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்.

பண்பாடு
Rosa Parks கேட்டது போல், "Ain't she a woman?" துன்பத்தில் இருக்கும் பெண்ணை மேலும் துன்புறுத்துவதா நம் பண்பாடு" என்று கேள்வி எழுப்பியுள்ளார்... ஷாலினி இதற்கு முன்பும் மதுவந்தி பேசுவது குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.. ஒரு முறை இதுகுறித்த பதிவில், "மதுவந்தி பேசுவதை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையில்லை, அவர் ஃபேம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அப்படி பேசுகிறார், அவரை புறக்கணித்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

கருத்துக்கள்
அதேபோல, மதுவந்தி பேச்சு குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, "முழு அறியாமையில் அவர் இருக்கிறார்... வெயிலில் அழியாத கொரோனா விளக்கேற்றினால் அழிந்துவிடுமா என்று தெரியவில்லை. ஒரு கட்சியில் சேர்ந்திருப்பவர் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதுவுமே தெரியாமல் பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications