எடப்பாடி பழனிசாமிக்கு குஷி.. அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி முன்னாள் எம்.பி கே. சி. பழனிச்சாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு விளக்கம் அளித்த நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி கே சி பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications