கடனுக்கு மட்டுமல்ல.. வேலைக்கும் 'சிபில் ஸ்கோர்' ரொம்ப முக்கியம்! உஷாரா இருங்க இளைஞர்களே!
சென்னை: வங்கியில் வேலை செய்வதற்கு 'சிபில் ஸ்கோர்' (CIBIL score) நல்ல நிலைமையில் இருப்பது முக்கியம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இதனை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி (CBO) பதவிக்கு சமீபத்தில் ஒருவரை நியமித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை திடீரென ரத்து செய்து, அவரை பணியிலிருந்து விடுவித்திருக்கிறது. நியமிக்கப்பட்ட நபர் கடனை சரியான காலத்தில் செலுத்தாததால் அவரது சிபில் ஸ்கோர் குறைந்திருக்கிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வங்கி விளக்கமளித்தது.

மனு தள்ளுபடி
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் வங்கி நிர்வாகம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று கூறி, பாதிக்கப்பட்ட நபர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பணத்தை கையாளும் வங்கி ஊழியர்கள் கண்டிப்பாக நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணம் என்று நீதிபதி கூறியுள்ளார்.
வங்கிகளின் விதிமுறைகள்
"மோசமான நிதி ஒழுக்கத்துடன் இருந்தால், அவரை நம்பி எப்படி பொதுமக்களின் பணம் ஒப்படைக்கப்படும்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிபில் ஸ்கோர் தொடர்பான தகுதி அளவுகோலை, மனுதாரர் எதிர்க்கவில்லை. அதாவது ஆட்சேர்ப்புக்கு கொடுக்கப்பட்ட விதிமுறையில், விதிமுறை 1(E)-ல் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறான பதிவுகள் உள்ளவர்கள், அல்லது CIBIL குறித்து பிற வெளிப்புற ஏஜென்சிகளிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டவர்கள் நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கடனால் பறிபோன வேலை
இருந்தும், மனுதாரர் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் உள்ள தகுதி நிபந்தனையை ஆட்சேபிக்காமல் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, அவருடைய 'சிபில் ஸ்கோர்' மோசமாக இருப்பதை வங்கி தெரிந்துகொண்டது.
கடன் வரலாறு
இந்த நபர், கடந்த 2018ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த நேரத்தில் ரூ.90,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை மூன்று தனிநபர் கடன்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், கடனை சரியான தேதியில் திருப்பி செலுத்தாமல் இருந்திருக்கிறார். மேலும், 2019ம் ஆண்டில் எச்.டி.எஃப்.சி வங்கிக்கு ரூ.40,000 கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாமல் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மை
இந்த விவரங்களை மனுதாரர் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது மறைத்ததை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் கண்டுபிடித்திருக்கிறது. இருப்பினும் எஸ்பிஐ வங்கியில் வேலைக்கு சேரும்போது அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்த சிபில் ஸ்கோர் அளவுகோளை, ஆட்சேர்ப்புக்கு எதிராக பயன்படுத்த முடியாது என்று பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
நீதிபதியின் தீர்ப்பு
ஆனால் இந்த வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை. விண்ணப்பிக்கும் முன் நிலுவைத் தொகையை செலுத்துவது பற்றி இந்த விதிமுறை இல்லை. சரியான நேரத்தில் கடன்களை செலுத்தியிருக்க வேண்டும் என்பதைதான் எஸ்பிஐ எதிர்பார்த்தது. மோசமான சிபில் ஸ்கோர் உள்ளவர்களை நியமிக்க வேண்டாம் என்று SBI எடுத்த முடிவு விவேகமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற வழக்கு ஒன்றில் கடந்த 2003ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, இனி கடன் வாங்குவதற்கு மட்டுமல்ல, வேலைக்கும் கூட சிபில் ஸ்கோர் அவசியம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
வாங்கப்பட்ட கடனுக்கு சரியான நேரத்தில் EMI கட்டுவது, குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைப்பது ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இதைத்தான் சிபில் ஸ்கோர் என்கிறார்கள். இதை வைத்து ஒருவரின் கடன் வரலாறு எப்படி இருக்கிறது? அவர் நிதி விவகாரத்தை சரியாக கையாள்கிறரா? என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications