யுவராஜ் மனைவி கணவருக்காக தொடர்ந்த வழக்கு.. திடீர் வாபஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில்
வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதியளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவக் கொலை வழக்குகளில் ஒன்றான கோகுல் ராஜ் கொலை வழக்கும் ஒன்று. இந்த சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜ், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் ஆவார். அவரும் சுவாதி என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோயிலுக்கு வந்தார்கள். அங்கிருந்து கோகுல் ராஜ் சிலரால் சாதி ஆவணத்துடன் அடித்து இழுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல் ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் பாதையில் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ், அவரது ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரேஷ் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொடூர கொலை வழக்கில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின்போது முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தபேட்டி தான் முக்கிய சாட்சியாக மாறியது. இதன்படி முக்கியக் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. குறிப்பாக யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரோன் ஆகிய ஐந்து பேரை விடுதலை செய்திருந்தது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications