சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு அனுமதி! அப்போ சுந்தரி அக்கா உணவகம்?
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1417 கடைகள் இருந்த நிலையில் 300 கடைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுமதி கொடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்தக் கடைகளுக்கும் அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையின் இயல்பான தன்மையைப் பாதுகாப்பதே இந்த முக்கிய உத்தரவின் நோக்கமாகும்.

மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி மெரினா கடற்கரையை நேரில் ஆய்வு செய்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி ஏற்கனவே நீலக்கொடி சான்று பெற்றுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இரண்டு பகுதிகளை இச்சான்றிதழுக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுதவிர, தலைவர்கள் நினைவிடங்களுக்குப் பின்னால் உள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அச்சான்றிதழ் பெறும் பகுதிகளில் எந்தவிதமான கடைகளுக்கும் அனுமதி இல்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியின் பின்புறம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உலகில் வேறு எந்தக் கடற்கரையிலும் மெரினாவைப் போல இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கடைகள் இல்லை என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
கடலின் அழகை மறைக்கும் வகையில் கடைகள் இருப்பதால், பொதுமக்கள் அதை ரசிக்க முடிவதில்லை. எனவே, தற்போதுள்ள 1,417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
"உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், மற்ற கடைகள் தேவையில்லை" என நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர். கடற்கரை மக்களின் ரசனைக்கானதே தவிர, அதை வணிக வளாகமாக மாற்ற முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை இடையூறின்றி ரசிப்பதை கடைகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அந்த வகையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். தலா 100 கடைகள் வீதம் பொம்மைகள், ஃபேன்சி, உணவகம் ஆகிய கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் கடைகளுக்கு எந்த தடையும் இல்லை.
இந்த நிலையில் மெரினாவில் இயங்கி வந்த சுந்தரி அக்கா கடைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. இந்த கடையில் குறைந்த விலையில் தரமான அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுந்தரி அக்கா கடை மீன் குழம்பு, மீன் வறுவல் உள்ளிட்ட கடல் சார்ந்த உணவுகளுக்கு மிகவும் பிரபலமாகும். இந்த கடைக்கு 2019ஆம் ஆண்டு FSSAI சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுந்தரி அக்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications