சென்னையில் வீடு கட்டி போகிறீர்களா.. உங்கள் நிலம் இப்படி இருந்தால்.. சிக்கல் வரலாம்!
சென்னை: IIT மெட்ராஸ், பள்ளிக்கல்வி துறையும் இணைந்து 252 அரசுப் பள்ளிகளில் உள்ள 500 ஆசிரியர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை குறித்து பயிற்சி அளித்துள்ளது. அடுத்து வரும் எலக்ட்ரானிக்ஸ் யுகத்திற்கு ஏற்றார் போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம் என மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த விழாவில் பேசிய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி, இந்த நாள் ஒரு மகிழ்ச்சியான நாள். மனநிறைவு கொடுக்கும் நாள், ஏனென்றால் பல அரசு பள்ளி மாணவர்கள், பல அட்வான்ஸ் தொழில் நுட்ப நிறுவனங்களில் சேர்ந்து படிக்க போகிறார்கள் என்பது ஒரு பெரிய மகிழ்ச்சியான நாள். அதுவும் குறிப்பாக நம்ம மெட்ராஸ் ஐஐடியில் சேர்ந்து படிக்க போறாங்க அப்படீன்றது ரொம்ப மனநிறைவை கொடுக்கிறது. உறுதுணையாக இருந்து ஊக்குவித்த தமிழக அரசுக்கு என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச் 2022 காலக்கட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்தேன். அப்போது எங்க ஐஐடி மெட்ராஸ் டேட்டா சைன்ஸ் இல் 80 அரசு பள்ளி மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த எண்ணிக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று சொன்னேன். மிக உற்சாகத்தோடு அதனை கேட்டுக்கொண்டார்.
அதற்கு பிறகு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும், ஐஐடி மெட்ராசும் சேர்ந்து எடுத்த முடிவால் இன்றைக்கு 492 அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ்சி டேட்டா சைன்ஸ் இல் சேர்ந்து படிக்கிறாங்க.. இன்னும் ஒன்று இரண்டு வருடத்தில் ஆயிரம் மாணவர்களாக ஆகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தருணத்தில் ஐஐடி மெட்ராசும், தமிழக அரசும் சேர்ந்து இரண்டு பெரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் , நிறைய ஸ்மார்ட் சிட்டி உள்பட பல எலக்ட்ரானிக்ஸ் திட்டங்கள் வந்துகிட்டு இருக்கிறது. பாக்ஸ்கான் சிஇஒ நம்ம முதல்வரை சந்தித்தார். பின்னர் ஐஐடிக்கும் வந்தார்.
அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், நம் தமிழ்நாட்டில் அவர்களுக்கு தகுந்த தகுதி உள்ள வேலையாட்கள் கிடைப்பார்களா என்பது தான்? இதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு வருடம் முன்பே தமிழக அரசும், ஐஐடி மெட்ராசும் இணைந்து 252 அரசு பள்ளிகளில் 9,10,11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பவுண்டேசன் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்து 500 டீச்சர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்துள்ளோம். அடுத்ததாக இந்த ஆகஸ்ட் 3 வது வாரம் அந்த பயிற்சி ஆரம்பிக்க போகிறது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைய போகிறார்கள்.
அழிவில்லா கல்வி செல்வம்!
— DMK IT WING (@DMKITwing) August 9, 2023
IIT மெட்ராஸ், பள்ளிக்கல்வி துறையும் இணைந்து 252 அரசுப் பள்ளிகளில் உள்ள 500 ஆசிரியர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை குறித்து பயிற்சி அளித்துள்ளது. அடுத்து வரும் எலக்ட்ரானிக்ஸ் யுகத்திற்கு ஏற்றார் போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்… pic.twitter.com/VxFQy34pPX
அடுத்து வரும் எலக்ட்ரானிக்ஸ் யுகத்திற்கு நம் தமிழகத்தை சரியான முறையில் வழிநடத்தி செல்ல போகிறோம். இதற்காக பள்ளி கல்வித்துறைக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கும் நன்றி சொல்கிறேன். அடுத்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஐஐடி மெட்ராஸில் வந்து திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தமிழ்நாடு திறமையாளர்கள் தேர்வையும் அறிவித்துள்ளது. இது 10 வது படிக்கும் மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வு.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை 11, 12 மற்றும் கல்லூரியில் படிக்கும் வரை தமிழக அரசு கொடுக்க போகிறது. இதில் சேரும் மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சியும், தொழில் முனைவோராக மாற்றும் அளவிற்கு ஊக்கத்தையும் அளிக்க போகிறோம். இந்த முயற்சிகள் வெற்றி பெற மாணவர்கள் மற்றும் ஊக்குவிக்கிற பெற்றோர்கள் தான் காரணம். எல்லா மாணவர்களும் இந்த மாதிரியான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. நன்றாக படித்து தமிழகத்திற்கும் அவர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" இவ்வாறு ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications